சத்திரசிகிச்சையின் விளைவால் 3 தொப்புள்கள் !

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு செய்யப்பட்ட பிளாஸ்திக் சத்திரசிகிச்சையொன்றினால் ஏற்பட்ட கோளாறினால் அவரின் வயிற்றில் மூன்று தொப்புள்கள் காணப்படுவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவருக்கு எதிராக இப்பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.எய்லின் ஹார்பர் எனும் இப்பெண், லண்டன் வடக்கிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், பிளாஸ்திக் சத்திரசிகிச்சையொன்றை செய்துகொண்டார்.

இச்சத்திரசிகிச்சையின் பின்னர் தனது வயிற்றில் மூன்று தொப்புள்கள் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக எய்லின் கூறுகிறார். இதனால் இச்சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர் சிவா சிங் என்பவரிடம் ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்களைக் கோரி எய்லின் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு பிரித்தானிய மொடல்களில் ஒருவரான கெத்தி பெரியின் மார்பகங்களை பெரிதாக்குவதற்கு டாக்டர் சிவா சிங்  சத்திரசிசிச்சைசெய்த காட்சி  நேரடியாக ஒளிபரப்பப்பட்டதன் மூலம் டாக்டர் சிவா சிங் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings