விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சி யானது அனைத்து துறை களிலும் பல நவீன மாற்றங் களுக்கு வித்தி ட்டுள்ளது. போர் மற்றும் உளவு பார்த்த லிலும் பெரிய மாற்றங் களை ஏற்படுத்தி யுள்ளது.
குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப் பட்டன.
ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடை முறைகள் அக்காலத் தில் பின்பற்றப் பட்டன.
அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்க ப்பட்டது. தற்கால த்தில் அதை விட மிக நுணுக்க மான முறைகள் கையாளப் படுகின்றன.
அமெரிக்க இராணுவ மானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித் துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப் பட்டுள்ளன.
இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்ப டுவதால் அவற்றை அடையா ளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.