இன்றைய நவீன உலகில் போதிய மருத்துவ வசதிகளுக்கு மத்தியிலும் அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் பரவா நோய்களாக மாரடைப்பும் Myoiardial Infarction/மூளையடைப்பும் Stroke/CVA முன்னிலை வகிக்கின்றன.
இந்த நோய்களை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களாக அதிகரித்த கொலஸ்டோல், உயர்குருதி அழுத்தம், நீரிழிவு என்பன இருப்பதை அறிவீர்கள். எமது கொழுப்பு உணவின் ஓர் அங்கமே கொலஸ்ட்ரோல் ஆகும்.
இவை ஒரு குறிப்பிட்ட அளவில் இருப்பது எமது உடலுக்கு அவசியம். கொலஸ்ட்ரோலில் பல கூறுகள் உண்டு. HDl, LDL, TRIGLYCE RIDES என்பன முக்கிய கூறுகளாகும். இதில் HDL கொலஸ்ரோல் ஆபத்தற்றது.
அதிகமாக இருப்பினும் பாதிப்பில்லை. நன்மை தான். ஆனால் LDL, TRIGLYCE RIDES என்பன குறிப்பிட்ட அளவுக்கு மேலாக இருப்பது தீங்குகளை விளைவிக்கும்.
மொத்த கொலஸ்ட்ரோல் குருதியில் 200mg இற்கு அதிகமாக இருப்பின் நாம் உஷாரடைய வேண்டும்.
இதுவே 240 mg DL இற்கு அதிகமானால் கொலஸ்ட்ரோல் படிவு குருதிக் குழாய்களின் உட் சுவரில் படிந்து குருதி சீராகப் பயணிப்பதைத் தடுப்பதுடன் இரத்தச் சுற்றினில் குருதி உறைந்து CLOTS உருவாக வழிவகுக்கும். இந்நிலை மிகவும் ஆபத்தானது.
இக்குருதிக் கட்டிகள் இதய நாடிகளையோ மூளைக்குச் செல்லும் நாடிகளையோ அடைக்கும் போது மாரடைப்பு மூளையடைப்பு என்பன ஏற்படலாம்.
கொலஸ்ட்ரோல் படிவுகள் குருதிக் குழாய்களில் அதிகமாக படிவதால் குருதி பாயும் சிறு குழாய்களுள் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.
இவ் அடைப்புக்கள் சிறியளவில் இருக்கும் போது களைப்பு, மார்பு வலி, தலைவலி முதலான சில அறிகுறிகள் அடிக்கடி தோன்றும். ஆனால் அடைப்பு பெரிதாகி குருதி வழங்கல் பாதிப்புறும் போது தீவிர நோய் நிலை ஏற்படும். மூளை அடைப்பினால் பக்கவாதமும் ஏற்படலாம்.
மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம் செய்கிறார்கள் !
கொலஸ்ட்ரோல் படிவு அதிக கொழுப்பு உணவு வகைகளை உண்பவர்களிலும், எடை அதிகமாக உள்ளவர்களிலும் சிறு வயதிலிருந்தே சிறிது சிறிதாக மெதுவாக படிய ஆரம்பிக்கும்.
ஆண்களில் 25 வயதுக்குப் பின்னரும் பெண்களில் மாத விலக்கு நின்ற பின்னரும் கொலஸ்ட்ரோல் வேகமாக அதிகரிக்கும். பெண்களில் மாதவிலக்கு தொடரும் காலங்களில் பால் ஓமோன்கள் கொலஸ்ட்ரோலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஈஸ்ரஜன் குறையும் போது கொலஸ்ரோல் அதிகரிக்கும். ஒருவரில் கொலஸ்ட்ரோல் தேவையான அளவை விட அதிகரித்தாலும் வெளியே எதுவித அறிகுறிகளை உடனும் தோற்று விப்பதில்லை.
நடுத்தர வயதை அண்மிக்கும் போது இதன் படிவு குருதிக் குழாய்களில் அதிகரிக்கும் போதே அறிகுறிகள் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.
எதுவும் இது ஏற்படுத்தும் இதர நோய் நிலைகளைப் பொறுத்தே இருக்கும். சற்று காலம் செல்ல இப்படிவுகள் நாடிகளில் அதிகரிக்கும் போது மாரடைப்பு, மூளையடைப்பு
டயடினால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் !
அல்லது பக்கவாதம், சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், கண் பார்வையில் பாதிப்பு உட்பட பல பாதிப்புக்கள் ஏற்படும்.
கொலஸ்ரோல் அதிகரித்துள்ளதை LIPID PROFIFE என்ற குருதிப் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இரவு சாப்பிட்ட பின்னர் 12 மணித்தியாலங்கள் எதுவும் உண்ணாமல் இருந்து காலையில் இரத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
இடையில் வெறும் தண்ணீரைத் தவிர வேறு நீராகாரங்களும் அருந்தக் கூடாது.
இடையில் வெறும் தண்ணீரைத் தவிர வேறு நீராகாரங்களும் அருந்தக் கூடாது.
நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் முதலான நோயுள்ள வர்களும் உடற் பருமன் உள்ளவர்களும் கட்டாயமாக இப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பரம்பரையில் கொலஸ்ட்ரோல் உள்ளவர்களும் கட்டாயமாக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் மாதவிடாய் நின்று ேபான பெண்களும் இப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
உடலுழைப்பு குறைந்தவர்களும் பரிசோதித்தல் வேண்டும். கொலஸ்ட்ரோல் அதிகரிப்புக்கு அதிக கொழுப்பான உணவுகளை உட்கொள்வதும் பரம்பரை அலகும் முக்கிய காரணங்களாகும்.
உடலுழைப்பு குறைந்தவர்களும் பரிசோதித்தல் வேண்டும். கொலஸ்ட்ரோல் அதிகரிப்புக்கு அதிக கொழுப்பான உணவுகளை உட்கொள்வதும் பரம்பரை அலகும் முக்கிய காரணங்களாகும்.
இது தவிர முன் குறிப்பிட்டது போல உயர் குருதி அழுத்தமும், நீரிழிவு நோயும் அதிக உடலுழைப்பின்மையும் கொலஸ்ட்ரோலை அதிகரிக்க வைக்கின்றன.
வயது அதிகரிக்கும் போது கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு ஏற்படும். மது, புகைத்தல், மனச்சுமை, சூழல் மாசு, சில மருந்துகள் என பிற காரணங்களால் உடலில் கொலஸ்ட்ரோல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
பெரியவர்களுக்கான பொது அறிகுறிகள்தவறான உணவுப் பழக்கங்களே என்பதால் சிறு வயதிலிருந்தே உணவுக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். அதிகரித்த கொழுப்பு மற்றும் மாமிச உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வளரும் போது கொலஸ்ட்ரோலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. தானிய வகைகள், மரக்கறி வகைகள், இலைக் கறிவகைகள், பழவகைகள் முதலானவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகரித்த கொலஸ்ட்ரோல் இருப்பதாக இனம் காணப்பட்டவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மாமிசங்கள், எண்ணெய் வகைகள், நெய் முதலான பாற் பொருட்கள் என்பவற்றை இயன்றளவு தவிர்க்க வேண்டும்.
மது, புகைத்தல் என்பவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.போதிய உடலுழைப்பு அல்லது தேகாப்பியாசம் செய்ய வேண்டும். நடத்தல், நீந்துதல், துவிச்சக்கர வண்டியில் பயணித்தல் என்பன கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்திட உதவும்.
நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்த நோயாளர்கள் தமது நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வைத்திய ஆலோசனையுடன் கொலஸ்ட்ரோலின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும்.
கொலஸ்ட்ரோலின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மருந்தை உட்கொள்ளாது விடினும் உணவு கட்டுப்பாட்டைத் தொடர வேண்டும்.
மாரடைப்பு மற்றும் ஸ்ரோக் ஆபத்து ஏது நிலை உள்ளவர்கள் தொடர்ந்தும் சிறிய அளவில் கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும்.
தேகப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். எமது சீரான வாழ்க்கை முறையினால் மிக ஆபத்தான நோய்கள் ஏற்படுவதை இலகுவாக தவிர்க்க முடியும்.
கொலஸ்ட்ரோல் கொழுப்பு அதிகரிப்பின் ஆபத்துக்கள் பற்றி சிறு வயதிலிருந்தே சுகாதாரக் கல்வி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !இதன் மூலம் நீண்ட காலம் நோயற்ற சுகவாழ்வை வாழ முடியும். முதுமையிலும் தொல்லை களின்றி வாழ்ந்திட இது வழி வகுக்கும்.