நம் உடல் சூடாக காரணம் என்ன?

உடம்பு ரொம்ப சூடாகுது என்பது அநேகரால் சொல்லப்படும் ஒரு பாதிப்பு. இதற்கான பொதுவான காரணங்கள்…
உடல் சூடாக காரணம்?
1. இறுக்கமான ஆடை

2. ஜுரம்

3. தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல்

4. கடும் உழைப்பு

மருத்துவ காரணங்கள்

சில மருந்துகள்

நரம்புக் கோளாறுகள்

அதிக வெய்யில் உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்

இளநீர் குடிக்க வேண்டும்.

கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும்.

ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம்.

காய்கறி உணவு சிறந்தது.

ஒரு பேசினில் குழாய் நீர் பிடித்து பாதங்களை அதில் சிறிதுநேரம் அமிழ்த்தி வைக்கலாம்.

வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம்.

ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.

பழங்கள் உண்பது உடல் சூட்டினைத் தணியச் செய்யும்.

ஏலக்காய் டீ, பால் சிறந்தது.
மோர் சூட்டை நன்கு தணிக்கும்.

92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி’ சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.

கிர்ணி பழம் வெய்யில் காலத்தில் உண்ண வேண்டிய ஒன்று.

வெள்ளரிக்காயினை அடிக்கடி தினமும் சாப்பிடுங்கள் அல்லது தோல் சீவி ஜுஸ் செய்து குடியுங்கள்.

புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.

முள்ளங்கி சூட்டை தணிக்கும். எதிர்ப்பு சக்தியினைத் தரும். வைட்டமின் `சி’ சத்து நிறைந்தது. வீக்கங்கள் குறைக்கவல்லது.

எள் உண்பதும், நல்லெண்ணை உடலில் தேய்ப்பதும் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

சோம்பு ஊற வைத்த நீர் உடலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும்.
குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.

பாதாம் பிஸின் சிறிது, இரவில் நீரில் ஊற வைத்து காலை பாலுடன் கலந்து பருக சூடு தணியும்.

நனைத்த பருத்தி ஆடையினை உடலில் 15-20 நிமிடம் சுற்றி இருக்க உடலில் சூடு தணியும்.

சாதாரண நீர் குடிப்பது உடலை குளிரச் செய்யும்.

துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். தனியா, சீரகம், சோம்பு இவற்றினை பொடித்து நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உஷ்ணம் குறையும்.

தேங்காய் எண்ணை உடலில் தேய்த்துக் குளிக்க சூடு தணியும்.
கொழுப்பற்ற தயிர் தினமும் உட்கொள்ளுங்கள்.

மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.

தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.

தினமும் ஒரு எலுமிச்சை சாறு அருந்தலாம்.

ஆப்பிள் உடல் சூடு தணிய உதவும்.
Tags:
Privacy and cookie settings