பயோடேட்டாவில் கவனிக்க வேண்டியவை; உதவும் இணையதளம் !

நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்கள் பயோ டேட்டாவில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

சரியான குறிச்சொற்கள் (கீவேர்ட்ஸ் ) இடம் பெற்றிருப்பதும் இல்லாமல் இருப்பதும் 

அநேகமாக உங்களுக்கு வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் இருப்பதையும் தீர்மானிக்கலாம்.


ஆகவே அடுத்த முறை வேலைக்கான விண்ணப்பம் அனுப்பும் போது, 

பயோடேட்டா வில் சரியான குறிச்சொற்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . 

சரியான குறிச்சொற்கள் என்றால் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை மற்றும் உங்கள் திறமை தொடர்பான குறிச்சொற்கள்.

இணையத்தில் தகவல்களை தேடும் போது குறிச்சொர்களில் கவனம் செலுத்த வேண்டும் சரி, 

ஆனால் வேலைக்கான விண்ணப்பிக்கும் போது ஏன் குறிச்சொற்களில் குறியாக இருக்க வேண்டும் ? 

ஏனெனில் உங்கள் விண்ணப்பம் முதல் தடையை தாண்டி செல்வதற்கு குறிச்சொற்கள் அவசியம்.

முதல் தடை என்பது பயோடேட்டாக் களை பரிசிலீத்து தேர்வு செய்யும் சாப்ட்வேர். 

ஆம் பெரும்பாலான நேரங்களில் அதிலும் குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் வேலைக்கான விண்ணப்பங் களை சாப்ட்வேரே முதலில் படித்துப் பார்க்கின்றன.

வந்து குவிந்த விண்ணபங்களில் இருந்து இந்த சாப்ட்வேர் தேர்வு செய்து தரும் விண்ணப்பங் களை தான் நிறுவன மேலதிகாரி கவனத்தில் எடுத்துக் கொள்வார்.

ஆக, சாப்ட்வேர் கண்ணுக்கு உங்கள் பயோடேட்டா சிறந்ததாக தோன்றா விட்டால் , அது நிராகரிக்கப் பட்டு விடலாம். 

நீங்கள் உண்மையிலேயே தகுதியான நபராக இருந்தாலும் பயனில்லாமல் போகலாம்.

சரி, நிறுவனங்கள் ஏன் இப்படி சாப்ட்வேரை நம்புகின்றன என்று கேட்கலாம். இதற்கான பதில் மிகவும் எளிதானது.


யோசித்துப்பாருங்கள், பெரிய நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கில் , ஏன் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவியலாம். 

அவற்றில் தகுதியான நபர்களின் பயோடேட்டாக் களை தேர்வு செய்வது சவாலானது தான்.

சவாலானது மட்டுமா ? பல நேரங்களில் பொறுமையை சோதித்து விடக்கூடும். 

அதனால் தான், அதிக அளவில் விண்ணப்பங்களை பெறக்கூடிய நிறுவனங்கள் முதல் கட்டத் தேர்வை சாப்ட்வேரிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.

இந்த சாப்ட்வேர்களிடம் பணிக்கான தகுதியை தீர்மானிக்கும் குறிச்சொற்களை சமர்பித்தால் போதும் 

அவை விண்ணப்பங் களில் அந்த குறிச்சொற்களை தேடிப்பார்த்து பொருத்த மானவற்றை வடிகட்டித் தந்து விடும்.

இதனால் மேலதிகாரியின் சுமை குறையும். அதன் பிறகு மேலதிகாரி அவற்றை சுலபமாக பரிசிலித்துக் கொள்வார்.

சாப்ட்வேருக்கு விண்ணப்பிப்ப வர்களின் தகுதியை புரிய வைப்பதற்காக, வேலைக்காக எதிர் பார்க்கப்படும் திறமை 

மற்றும் தகுதியை உணர்த்தக் கூடிய சொற்களை தேர்வு செய்து வழங்குவார்கள்.

இத்தகைய குறிச்சொற்கள் இருந்தால் தான் சாப்ட்வேரின் கண்ணுக்கு நீங்கள் தகுதியானவராக தோன்றுவீர்கள்.

இப்போது பயோடேட்டா வில் வேலைக்கு பொருத்தமான குறிச்சொற்கள் இருப்பதன் அவசியம் புரிந்திருக்கும். 

சரி, வேலைக்கான சரியான குறிச்சொற்களை தெரிந்து கொள்வது எப்படி? கவலையே வேண்டாம் ,

வேலைக்கு விண்ணப்பிக்க உதவுவதற் காக இணைய தளங்கள் இருப்பது போல,  இதற்காகவும் இணைய தளங்கள் இருக்கின்றன.

இந்த இணைய தளங்களில் பயோடேட்டாவை சமர்பித்தால் அதில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா ? என்று இவை பரிசோதித்து சொல்கின்றன.


ஜாப்ஸ்கேன் (http://www.jobscan.co/ ) இணையதளம் இதை தான் செய்கிறது. 

90 சதவீத பெரிய நிறுவனங்கள் பயோடேட்டா க்களை பரிசிலிக்க சாப்ட்வேரை தான் பயன்படுத்துகின்றன என்று எச்சரிக்கும்

இந்த தளம் இரண்டே நொடிகளில் உங்கள் பயோடேட்டாவை அலசிப்பார்த்து அது சரியாக இருக்கிறதா ? என்று சொல்லி விடுவதாக உறுதி அளிக்கிறது.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் உங்கள் பயோடேட்டாவை அதற்குறிய கட்டத்தில் சமர்பித்து 

அருகே உள்ள கட்டத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கான வரையரையை குறிப்பிட வேண்டும்.

பின்னர் 2 நொடியில் உங்கள் ப்யோடேட்டா எந்த அளவுக்கு பொருத்தமானதாக இருக்கிறது எனும் அறிக்கையை தருகிறது. 

அதை வைத்துக் கொண்டு உங்கள் பயோடேட்டா சரியாக இருக்கிறதா, இல்லை அதில் மாற்றங்கள் தேவையா என தீர்மானித்துக் கொள்ளலாம்.

இந்த தளத்திலேயே , பயோடேட்டா சரியான குறிச்சொற்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் கட்டுரைகளுக் கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன. 

சரியான குறிச்சொற்களை கண்டுகொள்ள நிபுணர்கள் எளிமையான வழிகளையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

முதலில் வேலைக்கான விளம்பரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள தகுதிக்கான வரையறை களை படித்துப் பார்த்து 


அவை தொடர்பான கல்வித்தகுதி மற்றும் திறமையை குறிக்கும் சொற்கள் இடம்பெற வேண்டும் என்கின்றனர்.

அதே போல உங்கள் துறை சார்ந்த பொதுவான வார்த்தைகள் மற்றும் நிறுவன அதிகாரி எதிர் பார்க்கும் தகுதி தொடர்பான சொற்கள் இருக்க வேண்டும். 

ஆனால் இந்த குறிசொற்கள் திறமை சார்ந்த்தாக இருக்க வேண்டும். மானே தேனே பாணியில் சேர்த்துக் கொண்டால் நிராகரிக்கப் படலாம்.

அதே போல படங்கள் மற்றும் வரைகலை போன்ற அலங்காரங்களை தவிர்ப்பதும் நல்லது என்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings