சமூக வலைத்தளங்கள், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மறக்கவோ மாற்றவோ முடியாத அம்சமாக மாறி வருவதை எவரும் மறுக்க முடியாது
விரல் நுனியில் தகவல்களை தரக்கூடிய இணையத்தின் முன்னால் பலர் பல மணி நேரம் அடிமைப்பட்டு கிடப்பதும் தற்போது அதிகரித் துள்ளது.
நாள்முழுவதும் இணையத்தில் குறிப்பாக முகப்புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்று சிலர் குறை கூறினால் முகப்புத்தகம் தரும் வசதிகள் தொடர்ந்தும் முகப்புத்தகத்தில் மூழ்கி இருப்பதற்கு வழிகோலி யுள்ளது.
வங்கிக்கு சென்று பணபரிமாற்றம் செய்தவர்கள், இணைய வங்கிகளில் பணப்பரி மாற்றம் செய்தவர்கள் இனி அங்குமிங்கும் அலையாமல்
முகப்புத்த கத்தின் ஊாடாகவே பணப்பரி மாற்றம் செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆச்சரிய மடைவீர்களா?
கடந்த 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி உலகத்துக்கு அறிமுகப்ப டுத்தப் பட்ட மிக முக்கியமான வலைத்தளம் என்ற பெயரை முகப்புத்தகம் (பேஸ்புக்) பெற்றுக் கொண்டுள்ளது.
முகப்புத் தகத்தை பயன்படுத்தும் எவராக இருந்தாலும் அதிலுள்ள அப்ஸ்களை பயன்படுத் தியிருப்பர்.
காரணம் இதில் அறிமுகப் படுத்தப்படும் அனைத்து அப்ஸ்களிலும் ஏதேனுமொரு நல்லவிடயம் அடங்கி யிருக்கும். அவ்வாறு தற்போது, புதியதொரு அப்ஸை முகப்புத்தகம் அறிமுகப்ப டுத்தியுள்ளது.
மணிஓர்டரில் ஆரம்பித்து ஈ-கேஷ் வரை வந்துள்ள பணமாற்று முறையை தற்போது முகப்புத்த கத்திலும் பயன்படுத்த முடியும்.
இந்த அப்ஸ், முதல் முதலாக அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட வுள்ளது. முகப்புத்தகத்தில் ஒரு அப்ஸ்ஸாக காணப்படும் மெசெஜ்சரிலேயே, இந்த தெரிவு காணப்பட வுள்ளது.
முகப்புத்தக மெசெஜ்சர் சேவையில் ஸ்டிக்கர் அனுப்பும் பட்டனுக்கு அருகில் ‘$’ என்ற பட்டன் அறிமுகப் படுத்தப்படும்.
இந்த பட்டனை அழுத்தி, வாடிக்கை யாளரது டெபிட் கார்ட் அட்டை இலக்கத்தை பதிவு செய்து அவர்களுக் கென்று ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் வாடிக்கை யாளர்கள் அதில் குறிப்பிடும் பணத்தொகை விரைவில் உரிய நபருக்கு பரிமாற்றம் செய்யப்படும்.
சில வேளைகளில் வாடிக்கை யாளர்களின் கணக்கைப் பொருத்து இதற்கு சற்று காலம் எடுக்கக்கூடும்.
வாடிக்கை யாளர்களின் கணக்கையும் அடையாள எண்ணையும் பாதுகாத்துக் கொள்வதற் காக அதற்கென அங்கிகரிக்கப் பட்ட பாதுகாப்பு களையும் அதில் மேற் கொள்ள முடியும்.
மேலும் வாடிக்கை யாளர்களின் பணத்தை பாதுகாக்க முகப்புத்த நிறுவனம் எதிர்ப்பு மோசடி நிபுணர்கள் அடங்கிய குழுவொ ன்றையும் நியமித் துள்ளது.
தரம் வாய்ந்த சேவையாக இருக்கும் இந்த சேவையை ஆப்பிள், ஆன்ட்ராய்ட், கணினி என்று அனைத்திலும் உபயோகப் படுத்தலாம் என்று முகப்புத்தக நிறுவனம் தெரிவித் துள்ளது.