முதன்முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான விண்கலத்தை டிசம்பர் மாதம் ஏவுகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற விண்கலம் ஏவப்படுகிறது.
இந்த விண்கலம் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் பெருவேகத்தில் நடந்து வருகின்றன. இதை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பிரசாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் பிரசாத் கூறுகையில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்ற 2 வகை விண்கலங்களை இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைத்து செலுத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு சாதனைகளையும் விண்வெளியில் நிகழ்த்தி வருகிறது.
தற்போது, மனிதனை விண்ணுக்கு பாதுகாப்பாக அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் சோதனை அடிப்படையில் ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 எனப்படும் ‘எல்.வி.எம் 3-எக்ஸ்’ என்ற விண்கலத்தை வருகிற டிசம்பர் 15ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிக்குள் ஏதாவது ஒரு நாள் காலை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இது மாதிரி விண்கலமே தவிர, முழுமையானது அல்ல. 630 தொன் எடை கொண்ட இந்தவிண்கலத்தின் மேல் பகுதியில், 3 மனிதர்களை பத்திரமாக விண்ணுக்கு அனுப்பி மீண்டும், பூமிக்கு அழைத்து வரும் வகையில் ‘கப் கேக்’ வடிவிலான ஒரு அறை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்களின் உடல்நிலை மற்றும் தொழில்நுட்பங்களை கணக்கில் கொண்டும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 தொன் எடை கொண்ட இந்த அறை 2.7 மீற்றர் உயரமும், 3.1 மீற்றர் சுற்று வட்டமும் கொண்டதாகும்.
தளத்தில் இருந்து ஏவப்படும் றொக்கெட்டில் 126 கி.மீ. உயரத்தை அடைந்ததும், அறை போன்ற விண்கல அமைப்பு பிரிந்து விடும். விண்வெளி வீரர்கள் இல்லாத காலியான அந்த விண்கல அமைப்பு பின்னர் பூமியை நோக்கி திரும்பி வரும். 3 பரசூட்கள் மூலம் அது பத்திரமாக தரை இறங்கும்.
விண்ணில் இருந்து பூமியை நோக்கி வினாடிக்கு 7 மீற்றர் வேகத்தில் வரும் அந்த விண்கல அமைப்பு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் அருகே 600 சதுர கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் கடலில் பத்திரமாக விழும்.
கடலில் விழும் இந்த விண்கல அமைப்பை மீட்பற்காக இந்திய கடற்படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அதனை மீட்டு சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றன. இந்த சோதனை வெற்றி பெற்றால் அந்த நாடுகளின் வரிசையில் 4 ஆவது இடத்தை இந்தியாவும் பிடிக்கும்.
அத்துடன், அதிகமான எடை கொண்ட விண்கலத்தை விண்ணில் அனுப்பிய பெருமையையும் இந்தியா பெறும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு மத்திய அரசு முறையான அனுமதி அளிக்கவில்லை. வரும் காலங்களில் மனிதர்களை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, இதுபோன்ற தொழில் நுட்பம் கைகொடுக்கும்.
இந்த றொக்கெட்டை வடிவமைக்க ரூ.140 கோடியும், விண்வெளி வீரர்கள் அமரும் அறை போன்ற அமைப்பை உருவாக்க ரூ.15 கோடியும் சேர்த்து ரூ.155 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டு உள்ளது.
இது பரிசோதனை முயற்சி என்பதால் ரொக்கெட்டில் உள்ள முதல் இரு நிலைகள் மட்டும் சோதித்துப்பார்க்கப் படுகின்றன. 3ஆவது நிலையான ‘கிரையோஜெனிக்’ என்ஜின் சோதனை நிலை இதில் இடம் பெறாது” – என்றார்.