இமெயில் செல்லும் தூரத்தைக் கணக்கிடும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ஒரு இமெயிலை அனுப்பிய பிறகு அது பெறுநரின் இன்பாக்ஸை அடைவதற்கு
எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதைக் கண்டறிய புதிய ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் இமெயில் மற்றும் சமூக வலைத் தளங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் தேவையான மெயில்களோடு, தேவையற்ற மெயில்களும் வருகின்றன.
ஆனல் அவை எங்கிருந்து வருகின்றன என்பது புரிவதில்லை. அதனால் பல்வேறு குழப்பங்களும் ஏற்படுகின்றன.
இவற்றைப் போக்கும் வகையில் புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தை, லண்டனில் உள்ள ஜோனா ப்ருக்கர் கோஹன் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இன்றைய வேகமான உலகத்தில் இந்தக் கருவி பெரும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு இமெயில் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியும்.
மேலும் பயணம் செய்த இடங்களின் வரைபடமும் வெளியாகும். இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் இணையக் குற்றங்களைக் கண்டறிவது எளிதாகும்.