நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !

2 minute read
வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள ஒரு வரப் பிரசாதம் தான் பனைமரம்.
நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !
பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவகுணம் வாய்ந்தவை.

குறிப்பாக கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக் களை வாரி வழங்குகிறது நுங்கு.
நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படு கின்றன.

நுங்கின் மகத்துவங்கள்

நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கி விடும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
Tags:
Privacy and cookie settings