43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் !

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். 
43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் !
கணவர் மரணம் அடைந்து விட்டதால் அவரது வாழ்க்கை கேள்விக் குறியானது. அவரது குல வழக்கப்படி கணவனை இழந்த பெண் வேலைக்கு செல்லக் கூடாது. 

அடுத்தவரை நம்பி அதாவது பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலை இருந்தது. அதற்கு சிசா அபுவின் தன்மானம் இடம் கொடுக்க வில்லை. தனது சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என விரும்பினார். 

இந்த நிலையில் அவருக்கு ‘ஹுடா’ என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது மகளை கவுரமாகவும் அருமை பெருமையாகவும் வளர்க்க விரும்பினார். பெண்ணான தான் வேலைக்கு செல்ல விரும்பினார். 

ஆனால் ஆண்களின் கழுகு பார்வையில் இருந்து தப்ப ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்.

ஒரு ஆண் போன்று வேடம் அணிந்தார். மிகவும் தளர்ந்த உடைகளை அணிந்தார். தனது சிகை அலங்காரத்தை மாற்றினார். செங்கல் சூளை வேலைக்கு சென்றார். கட்டிட வேலைக்கு சென்றார்.

அங்கு சிமெண்டு, மணல் மற்றும் செங்கற்களை சுமந்து கஷ்டப் பட்டார். தெரு வீதிகளில் ‘ஷு’க்களுக்கு பாலிஷ் போட்டார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது மகளை வளர்த்து படிக்க வைத்தார்.
இது போன்றே தனது 43 வருட வாழ்க்கையை கழித்தார். அதன் பின்னர் வேடத்தை கலைத்து பெண்ணாக வாழ விரும்பினார். 

ஆனால் அவரது மகள் ‘ஹுடா’வுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால் ‘ஹுடா’ நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கை யானார்.

எனவே, மீண்டும் தொடர்ந்து ஆண் வேடத்திலேயே பணிகளை தொடர்ந்து தனது மகளையும், குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்றார். 

அவரது சேவையை பாராட்டி அவருக்கு சமூக சேவை நிறுவனம் லட்சியதாய் விருது வழங்கி கவுரவித்தது.
Tags:
Privacy and cookie settings