முதல் முறையாக வால் நட்சத்திரத்தில் இறங்கிய ஃபிலே !

10 ஆண்டு களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட ரோசெட்டா விண் கலத்தில் இருந்து ஃபிலே என்ற லேண்டர் 67பிஃசுரிமோவ் கெரசிமென்கா என்ற வால் நட்சத்திரத்தில் புதன் கிழமை (12) வெற்றிகரமாக த ரையிறங்கி யுள்ளது.
முதல் முறையாக வால் நட்சத்திரத்தில் இறங்கிய ஃபிலே !
வால் நட்டசத்தி ரங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் கடந்த 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திததி ரோசெட்டா விண் கலத்தை விண்ணில் ஏவியது. 

அதில் ஃபிலே என்ற 100 கிலோ எடையுள்ள லேண்டர் இணைத்து அனுப்பி வைக்கப் பட்டது.

இந்த விண்கலம் ரூபாய் 9 ஆயிரத்து 600 கோடி செலவில் உருவாக்கப் பட்டது. 67பி என்ற வால் நட்சத்தி ரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 

ரோசெட்டா 10 ஆண்டு களாக 6.4 பில்லியன் மைல் தொலைவு பயணம் செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் வால் நட்சத் திரத்தை அடைந்தது.

இதை யடுத்து, ரோசெட்டா வில் இணைக்கப் பட்ட ஃபிலே லேண்டர் புதன் கிழமை (12) காலை 3.30 மணிய ளவில், விண் கலத்திலிருந்து  பிரிந்து வால் நட்சத்திரத்தில் தரையிறங்கத் தயாரானது. 
ரோசெட்டா விலிருந்து பிரிந்து 7 மணி நேரம் கழித்து மாலை 4.03 மணிக்கு ஃபிலே வால் நட்சத்தி ரத்தில் பத்திர மாக தரையி றங்கியது.

வால் நட்சத்தி ரத்தில் பூமியில் இருந்து அனுப்ப ப்பட்ட ஒரு கலம் தரை யிறங்கி யுள்ளது இதுவே முதல் முறை யாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

67பி வால் நட்சத்திரம் பூமியில் இருந்து 500 மில்லியன் கிலோ மீட்டர் தொலை வில் தற்போது உள்ளது. ஃபிலே லேண்டர் வால் நட்சத் திரத்தில் 9 வகை ஆய்வு களை மேற் கொள்ள உள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.
Tags:
Privacy and cookie settings