பிரித்தானியா வில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின் அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக் குரிய கணக்கு களைச் செய்வதும், புத்தகங் களை வாசிப்பதும் எளிதாயிற்று.
ஹெய்டிக்கு முந்தைய சாதனை யாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154 ஆகும்.
ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங் களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுவாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள்.
ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங் களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுவாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள்.
பிரிட்டிஷ் மென்சாவின் தலைமை நிர்வா கியான ஜான் ஸ்டீவனேஜ் கூறுகை யில், ஹெய்டியின் பெற்றோர் சரியான நேரத்தில் தங்கள் குழந்தையின்
அறிவுக் கூர்மையை அறிந்து அவளை சரியான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றார். அவள் மென்சாவில் இணைந்து மேலும் சிறப்படை யலாம் என்று வாழ்த்தினார்.
ஹெய்டியின் தாய் சோஃபி ஒரு கலைஞர், இவருக்கு ஐசக் என்ற 9 வயது மகனும் உண்டு. அவன் தேவால யத்தின் பாடகர் குழுவில் இடம் பெற்றுள்ளான்.