நாம் உண்ணும் உணவுகள் சத்துக்களாக கிரகிக்கப் பட்ட பின்னர் தேவையி ல்லாத கழிவுகள் தினசரி வெளியேற்றப் படுகின்றன.
இந்த கழிவு களை நித்தம் அகற்றப் படவேண்டும் இல்லை யெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என்கின் றனர் மருத்துவர்கள்.
அதனால் தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின் றனர் அவர்கள். சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புற த்திற்கு மட்டும் அல்ல, எமது உடலுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம்.
உடலை வெளிப்புறம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கி றோமோ, அவ்வாறே உட்புற த்திலும் கழிவுகள் சிரமமாக அகற்றப்ப டுமாயின் 95% நாம் நோய்த் தொற்று என்ற அபாயத்தி லிருந்து நம்மை பாது காத்துக் கொள்ள முடியும்.
21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞா னத்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக் கின்றோமோ
அதைவிட அதிவே கமாய் நோய்களும் முன்னேற்றம் அடைந் துள்ளன என்பது கசப்பான உண்மை யாகும்.
நமது உடலி லுள்ள கழிவுகள் வியர்வை, சிறுநீர், மலம் என்பன வற்றின் மூலம் அகற்றப்ப டுகின்றது.
ஆயினும் முக்கியமான பெரும் நோய்களுக்கு காரணியா யிருப்பது பெருங் குடலில் அகற்றப்ப டாதிருக்கும் மலமும்,
அதனால் உருவாகும் டாக்ஸின் எனப்படும் நச்சுப் பொருளுமே ஆகும். டாக்ஸி னால் நம் உடம்பில் உள்ள பல்வேறு பொருட்களும் படிப்படியாக பாதிப்பிற் குள்ளா கின்றன.
உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் டாக்ஸின் பாதிக்கும் போது ஏற்படும் நச்சுத்தன் மையால் நமது ஆயுட் காலம் குறையும் வாய்ப்பு ஏற்படு கின்றது.
இளமையிலேயே முதுமைத் தன்மை, மூட்டுப்பிடிப்புகளும் நோவும், வெளிறிய கண்கள், வெளிறிய தோல், மந்தமான செயற் பாடுகள் என நமது அன்றாட வாழ்க் கையிலிருந்து நாம் விடுபடு கின்றோம்.
உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேற் றப்படுவது இயற்கையா கவே நடைபெற வேண்டும்.
நம்மை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் நம் பெருங் குடலை நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொ ள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உண்ணும் உணவை சரியான நேரத்தில் சரியான அளவில் உண்ண வேண்டும். நன்றாக மென்று அரைத்து சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவு தேவையான சத்துகள் அடங்கியதும், நார்ப்பொ ருட்கள் அடங்கி யதுமான உணவாக இருக் க வேண்டும்.
கண்ட எண்ணெயில் செய்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது. தரமான பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும்.
சிறு வயதிலேயே கர்ப்பமான ஷகிலா... தாய் செய்த காரியம் தெரியுமா?
மேலும் நன்மை தரும் பாக்டீரியா க்களை அழிக்கக் கூடிய ரசா யனங்கள், நிறமூட்டிகள், சுவை யூட்டிகள் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.
எனவே கழிவு தானே என்ற அலட்சியமாக இருக்காமல் தினசரி கழிவகற்றல் மூலம் உடலை இளமை யாகவும் நோயற்றும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.