சவுதியில் கட்டப்படும் கிங்டம் டவர் உயரம் 1 கிமீ !

முதலில் 1.6 கிலோ மீட்டர் உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் அவ்வளவு உயரமான கட்டிடம் கட்ட வசதி இல்லாததால் 1 கிலோ மீட்டருடன் நிறுத்திக் கொண்டுள்ளனர்.
சவுதியில் கட்டப்படும் கிங்டம் டவர் உயரம் 1 கிமீ !
கிங்டம் டவர் கட்டிடத்தை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவை வடிவமைத்த அமெரிக் காவைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் தான் வடிவமைத்துள்ளார்.

புர்ஜ் கலிபாவில் மொத்தம் 163 தளங்கள் உள்ளன. கிங்டம் டவரில் அதை விட கூடுதலாக 89 தளங்கள் அமைக்கப் படுகின்றது.

ஏட்ரியன் ஸ்மித் மற்றும் கார்டன் கில் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து கட்டும் கிங்டம் டவரின் கட்டுமானப் பணிகள் வரும் 2018ம் ஆண்டு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கிங்டம் டவரில் அலுவலகங் களுக்கு 7 மாடிகள், ஹோட்டல் களுக்கு 7 மாடிகள், சர்வீஸ் அபார்ட்மென்ட் களுக்கு 11 மாடிகள் தற்போது ஒதுக்கப் பட்டுள்ளது.

252 தளங்கள் இருந்தாலும் அதில் 167 தளங்கள் மட்டுமே பயன் படுத்தப் படக்கூடும் என்று கூறப் படுகிறது.

டவரில் மிகப்பெரிய தளம் எது என்றால் அது கார் நிறுத்தும் தளம் தான். அங்கு ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 200 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது.

தீபாவளி இனிப்பு.. அஞ்சீர் கட்லெட் செய்வது எப்படி?

ரியாத்: சவுதி அரேபியாவில் 1 கிலோ மீட்டர் உயரமுள்ள கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் மொத்தம் 252 தளங்கள் அமைக்கப் படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் கிங்டம் டவர் என்ற பெயரில் 1 கிலோ மீட்டர் உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கின. கிங்டம் டவரில் மொத்தம் 252 தளங்கள் அமைக்கப் படுகின்றன.
Tags:
Privacy and cookie settings