மூஸாஅலி மொஹம்மட் அல் முஜாமி என்ற 92 வயதான நபரே, தன்னை விட 70 வயது குறைந்த 22 வயதான பெண்ணை கடந்த வியாழக் கிழமை கப்பான் எனுமிடத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
58 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவரது முதலாவது மனைவி கடந்த 2010ஆம் ஆண்டில் உயிரிழந் துள்ளார். இந்த தம்பதியினர் 16 பிள்ளைகளைப் பெற்று அவர்களை சிறப்பான முறையில் வளர்த்து ள்ளனர்.
இந்நிலையில், அல்-முஜாமி பக்தாத்திற்கு அருகிலுள்ள கப்பான் என்ற கிராமத்தில் வைத்து ஆட்டம் பாட்டம் என 4 மணித்தி யாலங்கள் பெரும் கொண்டாட்டத் திற்கு மத்தியில் 22 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதன் போது அல் முஜாமியின் திருமண நிகழ்வின் போது அவரது 16 மற்றும் 17 வயதான இரு பேரன்களு க்கு அதே மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அல்-முஜாமி கூறுகை யில், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத் திருந்த மிக முக்கிய மான நாள் ஆகும்.
ஏனெனில் எனது பேரப்பிள்ளை களின் திருமணம் சில தடவைகள் பிற்போடப் பட்டது. இப்போது என்னுடைய திருமண நாளிலேயே அவர்களும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
எனது பேரன்களுடன் இணைந்து எனது திருமணம் நடந்தமை யினால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின் றேன். மேலும் தற்போது மீண்டும் எனது 20ஆவது வயதிற்கு திரும்பியது போல உணருகின்றேன் என்றார்.
இத்திருமணத் தின் போது உள்ளூரைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் பழங்குடி யின முக்கியஸ் தர்களும் கலந்து கொண்டனர்.