திரும்பத் பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் பேப்பர் கண்டுபிடிப்பு !

எழுத்துகளை அழித்துத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய `பேப்பரை’ உருவாக்கியிருப்பதாக தைவான் நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
திரும்பத் பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் பேப்பர் கண்டுபிடிப்பு !
`ஐ2ஆர் ஈ-பேப்பர்’ என்ற இந்த பேப்பரில், `பேக்ஸ்’ எந்திரத்தில் யன்படுத்தப் படக் கூடியதைப் போன்ற `தெர்மல் பிரிண்டர்’ கொண்டு அச்சிடப் படுகிறது.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அச்சிடப்பட்ட விஷயம் தேவைப்படாத போது, அதற்குரிய எந்திரத்தில் எழுத்துகளை அழித்து மீண்டும் பயன்படுத்த லாம்.

இவ்வாறு ஒரு பேப்பரை மீண்டும் மீண்டும் 260 முறை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

இந்த பேப்பரை உருவாக்கி யிருக்கும் தைவான் நாட்டு தொழிலகத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி யாளர்கள், போஸ்டர்கள், அறிவிப்புகள் போன்ற வற்றுக்குப் பயன்படுத்து வதற்கு இது மிகவும் ஏற்றது என்று கூறுகின்றனர்.

தற்போதைய அச்சிடும் முறையைப் போல இல்லாமல் இந்த பேப்பரில் குறைவான செலவில் அச்சிடலாம் என்றும் உறுதி தெரிவிக் கின்றனர். 
இந்த பேப்பர் மிகவும் மென்மையானது, எடை குறைவானது, திரும்பத் திரும்ப அச்சிடக்கூடியது.
இது ஓர் உண்மையான ஈ- பேப்பர்” என்று மேற்கண்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜான் சென் கூறுகிறார்.

இந்தத் தனித் தன்மையான பேப்பரில், `கொலஸ்டேரிக் லிக்விட் கிரிஸ்டல்’ என்ற வேதிப் பொருள், ஒருவகை பிளாஸ்டிக் படலத்துடன் பூசப்பட்டுள்ளது. 

இதுதான் இந்தப் பேப்பரை திரும்பத் திருப்பப் பயன்படுத்த உதவியாக உள்ளது. தற்போது காகித உற்பத்திக்கு என உலகெங்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. 
அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேப்பர், பெரும் வரவேற்புப் பெறும் என்று இதன் கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings