உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்படும் கேமரா.. உஷார் !

இந்த காலகட்டத்தில் பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை என்பது நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. குளியல் அறை முதல் அவர்கள் தங்கும் அறை வரை எங்கு பார்த்தாலும் ரகசிய கேமரா பொருத்தப் பட்டுள்ளது. 

உடை மாற்றும் அறையில்  மறைத்து வைக்கப்படும் கேமரா.. உஷார் !
இதனை தெரிந்து கொள்ளாத பெண்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள். 

அந்த காலத்தில் நம் ஊரில் உள்ள டெய்லர் கடை அண்ணாச்சி தைத்துக் கொடுக்கும் துணியை அணிந்து மகிழ்ந்தோம்.

அவர் தனக்கு தெரிந்த அளவு தைத்துக் கொடுத்த உடைகளையே ஏதோ ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்த ஆடையை அணிவது போன்று பெருமையாக அணிந்து அதை ஊருக்கே காட்டி வந்தோம். 

நாகரீகம் வளர்ந்தது, டெய்லர் கடை அண்ணாச்சியை நாம் எல்லாம் கிட்டத்தட்ட மறுந்து விட்டோம். ரகசிய கேமரா இருப்பதை எப்படி கண்டறிவது? எப்போதும் வெளியில் சென்றால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக துணிக்கடைக்கு செல்லும் போதும் சரி, ஹோட்டலுக்கு செல்லும் போதும் சரி உஷாராக இருக்க வேண்டும்.

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

துணிக் கடைகளில் உள்ள அதிலும் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கேமராக்களை மறைத்து வைக்கிறார்கள். இல்லையெனில் செல்போனை மறைத்துவைத்து பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுக்கிறார்கள்.

உடை மாற்றும் அறையில்  மறைத்து வைக்கப்படும் கேமரா.. உஷார் !

துணிக் கடைகளில் உடை மாற்றும் அறைக்கு சென்றால் உடனே ஆடையை அவிழ்த்து விட வேண்டாம். அந்த அறையில் கேமரா ஏதாவது உள்ளதாக என்று பார்க்கவும். அதன் பிறகு ஆடையை மாற்றுங்கள்.

உடை மாற்றும் அறைகளில் மறைத்து வைக்கப்படும் கேமராவில் பதிவாகும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் இணைய தளங்களுக்கு விற்கப் படுகிறது. 

தற்போது கேமராக்கள் கடுகு அளவில் கூட வந்துவிட்ட நிலையில் அவற்றை கண்டு பிடிப்பதும் கடினமாகி விட்டது. ஆடைகளை வாங்கினால் கடையிலேயே போட்டுப் பார்க்காமல் வீட்டுக்கு சென்று அணிந்து பாருங்கள். 

அளவு சரியாக இல்லை என்றால் மீண்டும் அதே கடையில் கொடுத்து மாற்றுங்கள் அல்லது அருகில் உள்ள டெய்லர் கடையில் அளவை மாற்றிக் கொள்ளுங்கள் பெண்களே.

பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவரான காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊசி, நூல் இல்லாம முகக்கவசம் தயாரிப்பது எப்படி?

மொபைல் போன்:

துணிக்கடையின் உடை மாற்றும் அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக செல்போனிலிருந்து போன் செய்து பாருங்கள். பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் கால் செய்து பாருங்கள். 

பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செயய் முடியா விட்டால் கண்டிப்பாக அந்த அறையில் ரகசிய கேமரா வைக்கப் பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடிகாரம் :

பொதுவாக ஹோட்டல் அறையில் கடிகாரங்கள், மேசை, செடிகள், புத்தகங்கள், வீட்டு தாவரங்கள் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். 

இதனை கண்டறிவதற்கும், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் கேமரா டிடெக்டர் பயன்படுத்துவது நல்லது.

கேமரா டிடெக்டர்:

நீங்கள் ஹோட்டல் அறையில் நுழையும் போது மிக கவனமாக கேமரா டிடெக்டர் பயன்படுத்தவும். கேமரா டிடெக்டர் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்..

கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்:

உடை மாற்றும் அறையில்  மறைத்து வைக்கப்படும் கேமரா.. உஷார் !

நாம் பயன்படுத்தும் அறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்க வேண்டும். அவற்றில் கூட ரகசிய கேமரா மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம்.
வீட்டிலேயே துணி முகக் கவசம் தயாரிப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய :

நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் ஒரு சிறப்பான கருவியாக மாறிக்கொண்டே வருகிறது. உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருக்கிறதா? இல்லையா என்பதை கூட எளிதில் கண்டறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Privacy and cookie settings