கல்விக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள் !

யூனிட்டுக ளுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டம் (Insurance schemes). இது இருவித பயன்களை தருகிறது. பெற்றோரு க்கு பாதுகாப்பும்; அதே நேரத்தில் என்ன நோக்கத்திற் காக

இந்த திட்டம் துவங்கப் படுகிறதோ அந்த நோக்கத் தையும் நிறை வேற்றி வைப்ப துமான இரண்டு பணி களை செய்கிறது.

துரதிருஷ்ட வசமாக பாலிசிதாரர் கால மானால், வாரிசாக நியமிக்கப் பட்ட வருக்கு ஒரு மொத்த தொகை ஈடாக கிடைக் கிறது.
கல்விக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள்



இதோடு பாலிசி முடிந்து போவதி ல்லை; மாறாக இச்சம்பவ த்திற்குப் பிறகும் பாலிசி தொடர் கிறது.

எப்படி? பிரிமியம் செலுத்து கிறவர் தான் காலமாகி விட்டாரே? யார் பிரிமியம் செலுத் துவது? கவலை யை விடுங்கள்!

பாலிசி தொடரும்!! ஆனால், தொடர்ந்து பிரிமியம் செலுத்த வேண்டியதில்லை.

பாலிசியின் முடிவில், முதலில் ஒப்புக் கொண்ட படி, பணத்தை கொண்டு வந்து சேர்க்கிறது இத்தி ட்டம்.

சாதாரண திட்டங் களை விட இதன் பிரிமியம் சற்று அதிகம் என்பதை மறுப்பத ற்கில்லை.

இத்திட்டத் தின் காலம் 12 லிருந்து 15 வருடங்க ளுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நலம். முகவர் நல்ல விபரம் தெரிந்த வரானால் பாலிசி குறித்த அனைத்து தகவல்க ளையும் உங்களுக்கு தெரிவிப்பார்.

முகவர்க ளிடம் பாலிசியின் அனைத்து பயன்களை யும் தெளி வாக கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். பாலிசியை தொடர்ந்தால் மட்டுமே திட்டத் தின் முழு பலனு க்கும் நீங்கள் உரியவர்க ளாவீர்கள்.

இடையில் நிறுத்தி விடுவ தானால், கிடைக்கும் பலனும் குறைவாகவே இருக்கும். அப்படி யானால் சில வருடங்களுக்கு ப்பின் பாலிசியை நிறுத்தி விடலாம் என சில முகவர்கள் கூறுவது ஏன்? அப்படி ஒரு வசதியை திட்டம் தன்னுள் கொண் டுள்ளது உண்மை தான்.

அது பாலிசியை தொடர முடியாத அளவுக்கு தவிர்க்க முடியாத இடையூறு கள் ஏதேனும் பாலிசி தாரருக்கு ஏற்பட் டால் அப்போது பயன் படுத்திக் கொள்வத ற்காக மட்டுமே.



இன்சூரன்ஸ் ஒன்று தான் சேமிப்புக்கு வழியா? வேறேது மில்லையா? ஏனில்லை? இருக்கி றதே பரஸ்பர நிதி பொதுவாக, இன்சூர ன்ஸ் திட்டங்கள் (Insurance schemes) நீண்டகால முதிர்வு கொண்டவை யாக இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு இப்போதே வயது 10 என்றால், கல் லூரிக்கு செல்ல இன்னும் 7 வருட ங்களே உள்ளன.

எனவே பணம் தேவைப் படும் காலம் வெகு அருகாமை யிலேயே இருக்கிறது. அப்படியா னால் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்கள் நோக்கத் திற்கு பொருத்த மாக இருக்காது. இங்கு தான் உங்கள் உதவிக்கு ஓடோடி வருகிறது பரஸ்பர நிதி. சுலபமானது;

அதிக செலவி ல்லாதது; புரிந்து கொள்வது எளிது. முதலீட்டாளர் சற்று கட்டுப்பாடு குறைந்த வராக இருக்கும் பட்சத்தி லும் கூட பரஸ்பர நிதி கடினம் காட்டுவ தில்லை.

பரஸ்பர நிதியை பொறுத் தவரை, சந்தை ஏற்றத்தி லிருக்கும் போது முதலீடு செய்ய விரும்பு வதும்; சரியும் போது விலகிக் கொள்ள முனைவதும், சகஜமாக, முதலீட்டா ளரிடையே காணப்படும் ஒரு மனோபாவம்.

இது ஒரு சரியான அணுகு முறை யல்ல. முறையா கவும் தொடர்ந்தும் முதலீடு செய்யு ங்கள். ஷிமிறி எனப்படும் சிஸ்ட மேடிக் இன்வெஸ்ட் மெண்ட் ப்ளான் ஒரு சரியான திட்டம்.

நீங்கள் விரும்பும் முதிர்வு காலம் 5 லிருந்து 8 ஆண்டுக ளெனில், பரவலான பங்கு முதலீட்டு நிதி திட்டம் (Diversified Equity Fund) அல்லது சரிவிகித வளர்ச்சி திட்டங்களை (Balanced Scheme) தேர்வு செய்யலாம்.



யூனிட் திட்டமா னாலும் சரி, பரஸ்பர நிதி திட்டமா னாலும் சரி உங்கள் பிரிமிய தொகை என்னென்ன இனங்களில் முதலீடு செய்யப் படுகின்றன என்பதை உற்று கவனி யுங்கள்.

ஆரம்ப காலங்களில் பங்கு முதலீடு களிலும் திட்ட காலம் முதிர்வை நெருங்கும் போது கடன் பத்திரங் களிலும் முதலீடு செய்யத் தக்க திட்டங் களை தேர்ந் தெடுங்கள்.

முடிவாக, குழந்தை எப்போது மேற் படிப்புக்கு செல்ல வேண்டி வரும் என்பதை அறிந்து அதற்கு ஏற்றபடி முதிர்வ டையும் திட்ட ங்களை தேர்ந் தெடுங்கள்.

நோக்க த்தை அடைய வேண்டிய இலக்காக கருதி, கட்டுக் கோப்பான முறையில் சேமிக்க பழகிக் கொள்ளுங்கள். சேமித்தால் உங்கள் குழந்தை யின் கல்வி அப்படி ஒன்றும் கடின மில்லை.
Tags:
Privacy and cookie settings