ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் ஆண்டிற்கு 20 முதல் 30 டன் அணுக்கழிவு வெளிப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை மூன்றாக பிரித்திருக் கிறார்கள்.
முதலாவது அதிகதிரியக்க கழிவு (High Level Waste), இரண்டாவது டிரான்சுரானிக் கழிவு (Transuranic Waste), மூன்றாவது குறைகதிரியக்க கழிவு (Low Level Waste).
அணுக்கழிவு களில் அதிகதிரியக்க கழிவு வெறும் ஒரு சதவிகிதமே, ஆனால் உலகில் வெளிவரும் கதிரியக் கத்தில் 95 சதவிகிதம் இந்த அதிகதிரியக்க கழிவுகளில் இருந்து தான் வெளிவருகிறது.
அணு உலையில் பயன்படுத்தப் பட்ட எரிபொருள் கழிவு தான் இந்த அதிகதிரியக்க கழிவு.
இரண்டாவதான டிரான்சுரானிக் கழிவு உரேனியத்தை விட கன உலோகங்க -லான புளுட்டோனியம், நெப்டுனியம் போன்றவை களை உள்ளடக்கியது.
குறைகதிரியக்க கழிவுகள் பெரும்பாலும் உடைகள், நீர் வடிகட்டிகள், குழாய்கள் மற்ற அணு உலை அன்றாடப் பொருள்களை உள்ளடக்கியன.
இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அளவு மற்ற கழிவுகளை விட குறைந்த அளவு எனினும், நமக்கு உடனடி ஆபத்து விளைவிக்கும் அளவிலானதே.
செறிவூட்டிய உரேனியத்தை சிறு சிறு உருண்டைகளாக நீள தடிக்குள் நெருக்கமாக அடுக்கி அணு உலை எரிபொருள் தயாரிக்கிறார்கள்.
இந்த எரிபொருள் அணு உலைக்குள் ஒரு வருடம் எரிந்த பின்னர் எரிதிறன் குறைந்து விடுகிறது என்று கழிக்கப்பட்டு விடுகிறது.
இப்படி கழிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிகவும் அபாயகரமான அளவு கதிரியக்கம் உடையது.
இந்த அதிகதிரியக்க கழிவுகள் அருகில் பாதுகாப்பு இன்றி சில வினாடிகள் இருந்தாலே உடனடி மரணம் தான்.
அணு உலை எரிபொருள் பயன்படுத்த ப்படும் போது யுரேனியம்-235 அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்று கின்றன.
இதனால் எரிபொருள் பயன்படுத்து வதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட பயன்படு த்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் பல ஆண்டுகளுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும். இவற்றை செயற்கையாக குளிரூட்ட ப்பட்ட தண்ணீர் குளத்திற்குள் சேகரித்து வைப்பார்கள்.
இது போன்ற குளங்கள் ஒவ்வொரு அணு மின் நிலையத் திலும் கட்டப்பட்டி ருக்கின்றன. இவ்வாறு பத்து முதல் இருபது ஆண்டுகள் குளிரூட்டிய பின் மறுசீராக்கலுக்கு (reprocessing) அனுப்புவார்கள்.
ஒரு வழியாக மறுசீராக் கலுக்குப் பின் பயன்படு த்தப்பட்ட எரிபொருளில் இருந்து அனைத்து கதிரியக்கமும் வெளியேறி சாதாரண கழிவாகி விடுமா என்று எதிர் பார்த்தால் அதுவும் இல்லை.
இந்த மறுசீராக்கலே ஒரு கண்கட்டி வித்தை போல தான் இருக்கிறது. பயன் படுத்தப்பட்ட எரிபொருளை துண்டு துண்டாக வெட்டி நைட்ரிக் அமிலத்தில் கரைக் கிறார்கள்.
பின்னர் இந்த கரைசலில் இருந்து புளுட்டோனி யத்தையும் (ஆயுதம் செய்ய) உரேனியத்தையும் பிரித்து எடுக்கிறார்கள்.
எஞ்சி இருக்கும் கரைசல் மிகுந்த கதிரியக்கம் உடைய கழிவாக இருக்கிறது. சிறிதளவு இருந்த கழிவை கரைத்து அதிகளவாக்கி விட்டு கதிரியக்க வீரியத்தை குறைத்து விட்டோம் என்கிறார்கள்.
ஆனால் இப்போழுது கழிவின் அளவு அதிகரித்து விட்டதே, ஆதலால் மொத்த கதிரியக்க அளவு அதே தானே இருக்கப் போகின்றது என்று வினவினால் பதில் தராமல் மழுப்பு கிறார்கள்.
எப்போழுது தான் இந்த கதிரியக்கம் முழுக்க ஒழிந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சாதாரண குப்பையாக மாறும்
என்று கேட்டால் சுமார் ஏழரை இலட்சம் ஆண்டுகள் பொறுங்கள் என்று பொறுமையாக பதில் தருகிறார்கள்.
நாம் அதிர்ச்சி அடைந்து நன்றாக சரி பார்த்து விவரமாக கூறுங்கள் என்று வினவினால் பாதி ஆயுள் (half life) என்று விவரிக்க தொடங்கி விட்டார்கள்.
கதிரியக்க மூலகங்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை பரப்பி வருவதால் நாளடைவில் வலுவிழந்து படிப்படியாக பாதியாக அளவில் குறைந்து விடுகின்றன அல்லது வேறு மூலகங்களாக மாறி விடுகின்றன.
இப்படி கதிரியக்க மூலகங்களின் வலு பாதியாக குறைவத ற்கான காலத்தை அரை ஆயுள் காலம் என்று கணக்கிடுகிறார்கள்.
அரை ஆயுள் காலத்தை வைத்து கதிரியக்க கன உலோகங்கள் எவ்வளவு விரைவாக தேய்கின்றன என்று கணித்து விடலாம்.
பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருக்கும் புளுட்டோனியம்-239 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுக ளாகும்.
இந்த 24,000 ஆண்டுகளுக்கு பின்னர் புளுட்டோனியம்-239, யுரேனியம் -235 ஆக மாறுகிறது. இந்த யுரேனியம்-235 கனஉலோகத்தின் அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகளாகும்.
பின்னர் இந்த யுரேனியம்-235 தோரியம்-231 ஆக மாறுகிறது. இப்படி படிப்படியாக பல கன உலோகங்களாக மாறி இறுதியில் ஈயம்-207 என்கிற கதிரியக்கம் இல்லாத கொடிய நச்சுப்பொருளாக நிலைப்பெறுகிறது.
இவ்வாறு இலட்சகணக்கான ஆண்டுகள் கதிரியக்கத்தோடு இருந்தால் அதுவரை எப்படி இந்த கழிவுகளை நாம் பாதுகாப்பது?
அரசாங்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பாதுகாக்க வில்லையா என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன தெரியும் என்று நமக்கு தானே தெரியும். ஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள்.
என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந் தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்து விட்டார்களாம்.
நவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.
`டிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.
இவை எல்லாம் நம் சிற்றறி விற்கு எட்டிய வைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிரு க்கிறதோ தெரிய வில்லை.
உலகத்திலேயே ஒரு பலவீன மான பாதுகாப்பு அமைப்பை வைத்துக் கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற
அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுக ளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்?
இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது. மின்சாரம் வேண்டுமா இல்லை புற்றுநோய் வேண்டுமா என்று கேட்டால்
மின்சாரம் எங்களுக்கு, புற்றுநோய் உங்களுக்கு என்று தெளிவாகத் தான் பதில் சொல் கிறார்கள் நகரவாசிகள்.
அவர்களுக்கு தெரிய வில்லை பாதிப்பு என்பது அணு உலை இருக்கின்ற ஊர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்து ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற் காவது பாதிப்பி ருக்கும் என்று.
இரசியாவில் செர்நோபில் விபத்து நடந்த போது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுவிடன் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்து விட முடியாது.
இப்படித்தான் முதன் முதலில் கதிரியக்க பொருள்கள் கண்டறியப் பட்ட போது ஆர்வமாக முகப்பூச்சு, தண்ணீர், மருந்து என்று அனைத்திலும் பயன்ப டுத்தினர்.
இப்போழுது யாரையாவது சிறிது உரேனியத்தை முகத்தில் பூசிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். அது போன்று தற்போது ஐம்பது வருடமாக அணு ஆற்றல் என்று ஆர்வமாய் அலைந்து கொண்டிரு க்கிறார்கள்.
அனேகமாக நூறு வருடத்திற்கு பின்னால் உலகத்தில் எங்குமே அணு உலைகள் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அணு உலைகள் வெடிக்கும் பட்சத்தில் உலகமே இல்லாமல் போய்விடும்.