ஜிமெயிலில் அனுப்பும் இமெயில்களை எப்படி ஷெடியூல் செய்வது?

முதலில் இந்த கேள்வியையே கொஞ்சம் விளக்கமாக பார்க்க வேண்டியுள்ளது. அலுவலகத்தில் நிறைய இமெயில்கள் அனுப்ப வேண்டி இருக்கும். 
ஜிமெயிலில் அனுப்பும் இமெயில்களை எப்படி ஷெடியூல் செய்வது?
இப்படி அனுப்பும் இமெயில்களை ஷெடியூல் செய்து வைக்க முடியும்.நாளை காலை 10 மணிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டயுள்ளது என்று வைத்து கொள்வோம். 

ஆனால் அடுத்த நாள் காலையில் வேறொரு முக்கியமான வேலையாக வெளியில் செல்ல வேண்டியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவசர அவரமாக லேப்டாப்பை திறந்து மெயில் அனுப்புவது என்பது சாத்தியமே இல்லை. 

இதனால் நாளைக்கு அனுப்ப வேண்டிய மெயிலை முன்கூட்டியே டைப் செய்து வைத்து கொண்டு,
எந்த நேரத்தில் அந்த மெயில் குறிப்பிட்ட நபருக்கு கிடைக்க வேண்டுமோ, அதற்கு தகுந்த வகையில் அந்த மெயிலை ஷெடியூல் செய்து கொள்ள வேண்டும். 

நாம் ஷெடியூல் செய்து வைத்த குறித்த நேரத்தில் அந்த மெயில் சரியாக, நபர்களை சென்றடைந்துவிடுகிறது.

இது போல் ஜிமெயிலில் ஷெடியூல் செய்து வைத்து கொள்ளவது எப்படி என்று பார்க்கலாம். 

முதலில் நாம் செய்ய வேண்டியது ஃபையர்ஃபாக்ஸ் மற்றும் க்ரோம் பிரவுசரில் பூமராங் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

இந்த சாஃப்ட்வேர் லோடு செய்யப்பட்ட பின்பு ஜிமெயில் பக்கத்திற்கு செல்ல வேண்டும். என்ன தகவலை டைப் செய்ய வேண்டுமோ அதை டைப் செய்து வைத்துவிட வேண்டும்.

சென்டு என்ற பட்டனுக்கும் அருகில், சென்டு லேட்டர் என்ற பட்டன் கொடுக்கப் பட்டிருக்கும். 
அந்த சென்டு லேட்டர் பட்டனை அழுத்த வேணடும். இந்த பட்டனை அழுத்திய பிறகு, எந்த நேரம் என்பதை நாம் குறிக்க வேண்டும்.

இப்படி ஷெடியூல் செய்து வைக்கும் மெயிலை, மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த ரீசென்டு செய்யவும் முடியும். அதற்கும் இதில் ஆப்ஷன் இருக்கிறது. 

‘பூமராங் திஸ் மெசேஜ்’ என்ற பட்டனுக்கும் பக்கத்தில் ஒரு பாக்ஸ் கொடுக்கப் பட்டிருக்கும். இந்த பாக்ஸில் டிக் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

இது போல் ஒரு மாதத்தில் 10 மெயில்களை ஃப்ரீயாக ஷெடியூல் செய்து வைக்க முடியும். 

அதிக மெயில்களை ஷெடியூல் செய்து வைக்க வேண்டும் என்றால், இதற்கு தனியாக ப்ரீமியம் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
Tags:
Privacy and cookie settings