டைம்லைன் பக்கத்தினை அனைவருக்கும் ஆகஸ்டு 8ம் தேதியிலிருந்து கட்டாயமாக்குகிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.
டைம்லைன் என்ற புதிய வடிவமைப்பினை ஃபேஸ்புக் வழங்கியது.இந்த புதிய வடிவமைப்பினை விரும்புவோர் டைம்லைன் பக்கத்திற்கு மாறி கொள்ளலாம்.
ஓரே பக்கத்தில் நிறைய தகவல்கள் நெருக்கமாக காட்டப்படுவதாக, ஃபேஸ்புக் உறுப்பினர்கள் உணர்ந்ததால்
நிறைய பேர் இந்த டைம்லைன் வசதியினை பயன்படுத்த வில்லை. டைம்லைன் வசதியின் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயத்தினை வரிசைப்படுத்தி பார்க்கலாம்.
உகாரணத்திற்கு 2011ம் ஆண்டு என்னென்ன தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறோம் என்று எளிதாக பார்க்கலாம்.
இப்படி பகிர்ந்து கொண்ட எந்த தகவல் களையும் வருடம் வாரியாக வரிசைப்படுத்தி பார்க்க, ஒரு புதிய வசதியினை வழங்கியது டைம்லைன்.
ஆனால் சிலருக்கு இந்த வடிவமைப்பு, திருப்தியை அளிக்கவில்லை என்பதனால், நிறைய ஃபேஸ்புக் உறுப்பினர்கள் இதை பயன்படுத்த வில்லை.
டைம்லைன் பக்கத்திற்கு மாற ஃபேஸ்புக் ஜனவரி மாதம் 31ம் தேதி வலியுறுத்தியிருந்தது ஃபேஸ்புக்.
இந்த டைம்லைன் பக்கித்தினை கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருந்தது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.
ஆனால் வரும் 8ம் தேதி டைம்லைன் பக்கத்தினை அனைவருக்கும் கட்டாய மாக்குவதாக கூறியிருக்கிறது ஃபேஸ்புக்.
இந்த ஃபேஸ்புக் டைம்லைன் பற்றி கூற வேண்டும் என்றால், பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க இது ஒரு நினைவு பேழை என்லாம்.
டைம்லைன் பக்கம் கட்டாயமாக்கப்படுவது பற்றி 8ம் தேதி வரை பொருத்திருந்து பார்க்கலாம்.