பத்து மா தங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல
தங்களின் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார்.
எனவே பிரசவம் முடிந்த பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த அளவு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால் வேலை செய்பவர்களுக்கு 2000 கலோரிகள் தேவையா