உங்கள் முதலீடுகளை கண்காணியுங்கள் !

சேமிப்பு, இன்சூரன்ஸ், எதிர்கால தேவைகள் (Savings, insurance, future requirements) என்று பல்வேறு அடிப்படையில் ஒவ்வொருவரும் பணத்தை சேமிக்கின்றனர்.
உங்கள் முதலீடுகளை கண்காணியுங்கள்
இந்த சேமிப்பின் ஒருவகையாக சிலர் பங்கு வர்த்தகம் (Stock Trading), மியூச்சுவல் பண்டு (Mutual Fund) , மற்றும் insurance திட்டங்களில் முதலீடு செய்வதுண்டு.

சிலர் இந்த நிதி முதலீடுகளை கவனமாக கண்காணித்து வருவார்கள். 

சிலர் வருமான வரி (Income tax) நெருக்கடியை தீர்க்க அந்த நேரத்தில் எந்த திட்டம் வசதியாக இருக்கிறதோ அதில் பணத்தை செலுத்தி விடுவார்கள். பின்னர் அதுபற்றி மறந்து போவதும் உண்டு.

எந்த திட்டத்தில் எப்போது சேர்ந்தோம் என்பது உங்களுக்கு மறந்து போகிறதா? 

அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவது எப்படி? என்பது போன்ற தகவல் களை இந்த வாரம் பார்க் கலாம். என்ன நடக்கிறது?

சிலர் வருமான வரி சலுகைகள் (Tax Concessions) பெறுவ தற்காக, பங்கு முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங் களில் (Equity linked mutual fund schemes) முதலீடு செய்வ துண்டு.
இவ்வா றான முதலீடுகள் வருடத்திற் கொரு முறை வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80சி யின் கீழ் செய்யப் படுபவை. 

இந்த திட்டங்களில் செய்யப் படும் முதலீடுகளை 3 ஆண்டுகளுக்கு திரும் பப்பெற இயலாது (lock in period) என்ற நிபந்தனைக்குட் பட்டதாக இருக்கும்.

எனவே, முதலீடு செய்பவர்கள் அந்த முதலீடு குறித்த எந்த தகவல் களையும் முறையாக பாதுகாப் பதில்லை. 

மேலும், இணைப் புகள் மற்றும் கையகப் படுத்துதல் (Mergers and Acquisitions) என்ற பெயரில் பரஸ்பரநிதி நிறுவனங்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைகிற சம்பவங்கள் சாதாரணமாகி விட்ட ஒன்று.

நிறுவனங் களின் இணைப்பு க்குப்பின் திட்டங்களின் பெயர்கள் மாறலாம்; அல்லது ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு 
அல்லது அதற்கும் மேற்பட்ட திட்டங்களை இணைக்கலாம். அவ்வாறே, ஒரே பரஸ்பரநிதி நிறுவனமே கூட திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும் உண்டு.

இது போன்ற மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் பரஸ்பர நிதி நிறுவனங்கள், அனைத்து முதலீட்டாள ர்களுக்கும் மாற்றம் குறித்த தகவல்களை கடிதமாக அனுப்பி வைப்பது வழக்கம். 

இந்த மாற்றம் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் திட்டத்தில் தொடரலாம். இல்லை யெனில் அபராதங்கள் ஏதுமின்றி திட்டத்தை விட்டு வெளி யேறலாம். 

அது உங்கள் விருப்பம். இனி என்ன செய்வது? திட்டத்தில் நீங்கள் தொடர விரும்பினால், உங்களுக்கு வந்த அந்த தகவல் தொடர்பை கண்டிப்பாக பத்திரப்ப டுத்துங்கள்.

அதன்பின், உங்களுக்கு வரும் அனைத்து கடிதங்களும் திட்டத்தின் தற்போதைய, அதாவது புதிய பெயருடனேயே வரும். கடிதங்கள் காணாமல் போனால்….? 

துரதிர்ஷ்ட வசமாக, அவ்வாறு பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்களென்று வைத்துக் கொள்வோம்.
உங்களிடம் திட்டத்தின் பழைய பெயரிலுள்ள முதலீட்டு சான்றிதழோ (Investment Certificate) அல்லது கணக்குப் பட்டியலோ (Statement of Account) 

அல்லது ஏதாவது குறிப்புக்களோ கிடைத்தால், இணைய தளத்தில் அந்த பழைய பெயரை குறிப்பிட்டு தேடுங்கள், அநேகமாக இணையதளம் உங்களுக்கு உதவக் கூடும்.
ஒரு வேளை இது பலன் தர வில்லை என்றால், நாட்டி லுள்ள 45 பரஸ்பர நிதி நிறுவனங் களையும் தேடி அலைவதை விடுத்து, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ் மெண்ட் சர்வீசஸ், 

கார்வீ கம்ப்யூட்டர் ஷேர், பீ என் பி பரிபா நிதி சேவை போன்ற முக்கியமான பெரிய ஒரு சில பதிவாளர்களை (Registrars) அணுகுங்கள். 

அல்லது, அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் (Agents or Financial Consultants) விசாரித்துப் பாருங்கள்.
உங்களுக்கு அவர்கள் வழிகாட்டு வார்கள். விலாச மாற்றத்தை தெரிவிக்கவும் ஏதாவது ஒரு விலாசத்தில் குடியிருக்கும் போது முதலீடு செய்திருப்பீர்கள். 

குடியிருக்குமிடமும் அலுவலகமும் மாறியிருக்கும். அப்போ தெல்லாம் உங்கள் முதலீடு உங்களை பின் தொடர்வதில்லை. ஏன்? 

முகவரி மாற்றத்தை நீங்கள் நிதி நிறுவனங்களுக்கு தெரிவிப்பதில்லை. உங்கள் முதலீட்டுக் கணக்கு பட்டியல் உங்களது பழைய முகவரிக்கே வந்து கொண்டிருக்கும்.

இதற்கு தீர்வு…..? உங்கள் வாடிக்கை யாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

கே. ஒய். சி. (Know your customer K Y C) என்கின்ற கோட்பாடு இன்று அனைத்து வங்கிக ளுக்கும், நிதி நிறுவனங் களுக்கும் கட்டாய மாக்கப்பட் டுள்ளது.

அதனை பயன் படுத்தி, உங்கள் முகவரி மாற்றத்தை தெரிவி க்கலாம். எனவே, உங்களது தகவல் களில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் கே.ஒய்.சி. தான் ஒரே வழி, மாற்ற ங்களை அறிவிப் பதற்கு.
மாற்றாக, மின்னஞ்சல் மு கவரியை முதலீட்டுக்காக மனு செய்யும் போதே பதிவு செய்யுங்கள். அப்போது விடுபட்டிருந்தால், இப்போது கூட மேற் சொன்ன பதிவாளர்கள் இதற்கான வழிகளை ஏற்படுத்தி தர முடியும்.
Tags:
Privacy and cookie settings