தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !

உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !
அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்…

தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான நார்ப்பகுதியால் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும். 
அதன் உள்ளே கடின ஓடுடன் விதைப்பகுதி பாதுகாக்கப் படுகிறது. விதையைச் சுற்றிய உறைப்பகுதியே நாம் தேங்காய் என்று அழைக்கிறோம். 

உலர் தேங்காய் கொப்பரைக் காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி, எண்ணெய் எடுக்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியதாகும்.

100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது. தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது.

நீண்டகாலம் கெட்டுப்போகாத ஆயுள் கொண்டது தேங்காய் எண்ணெய். லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் உள்ளது.

இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்போது வெள்ளை நிறத்தை தருகிறது. வேறுபல உண்ணக்கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. 

இவை உடலுக்கு ஆரோக்கியம் வழங்க வல்லவை. 232 டிகிரி வெப்ப நிலையில் தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள் 6 முதல் 12 கார்பன் அணுக்களை சங்கிலி இணைப்பாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அவற்றுக்கு சி1-முதல் சி12 வரை பெயர் சூட்டப் பட்டுள்ளது.

லூரிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்பி ரிலிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை மட்டும் பூரிதமான கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பின் அளவை நீடிக்கச் செய்ய உதவு பவையாகும். 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது.
தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !
12 கார்பன் அணுக்களை கொண்ட இது தான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச் சத்தை வழங்குகிறது.
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின்-இ மிகக் குறைந்த அளவில் உள்ளது. குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.

இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களையும், லோஷன் களையும், ஷாம்புக் களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும்.

இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

இம்முறை குளிர்காலம் சீக்கிரமே வந்து கொண்டிருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இது தான் தருணம். குளிர் காலத்தில் நாம் நமது சருமத்திற்கும் தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

வறண்ட குளிர்ந்த காற்று உங்கள் சருமத்திலும் தலைச் சருமத்திலும் நீர் நீக்கலை ஏற்படுத்தி விடும்.  வறண்ட சருமத்தால் உங்களது முகமும் சருமமும் அழகற்று காட்சியளிக்கும். 

இதனை தவிர்ப்பதற்கு நாம் மாய்ஸ்சுரைசர் மற்றும் க்ரீம்களை உபயோகிக்க வேண்டும். நமது சருமம் குளி ர்காலத்தை உணரும் திறனை பெற்றுள்ளது. ஆனால், நமது உதடுகளோ இதை காட்டிலும் இரண்டு மடங்கு உணரும் திறனை பெற்றிருக்கின்றது.

நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர் காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை.

இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப் படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சி யளிக்கின்றது.

இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் க்ரிம்களும் கிடைக்கின்றன. 

வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி
தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !
மீண்டும் நீரேற்றல் செய்யும். வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரி செய்வதற்கு சிறந்ததாகும்.

இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர் காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும்.
நீங்கள் ஆரோக்கிய சாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !
அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது படிக்கலாம்.

எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடை வேளைகளில் எண்ணையை தடவிக் கொள்ள வேண்டும்.

உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக் கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக் கொள்ள வேண்டும். 

தேங்காய் இது எண்ணெயை பயன்படுத்தி வெடித்த உதடுகளைச் சிகிச்சை செய்வதற்கான சிறந்த வழியாகும். குளிர் காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள்.
தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !
கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது, முடிகொட்டுவது மட்டுமில்லாமல் முடி நரைக்கவும் செய்யும் என்பது உண்மை.

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணெய் இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.

சரி தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும். தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணெயின் விலை கூடுவதில்லை. பின் எப்போது தான் கூடுகிறது? கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் கூடுகிறது.
கச்சா எண்ணெய்க்கும் – தேங்காய் எண்ணைய்க்கும் என்ன சம்பந்தம் ? 

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் மினரல் ஆயில் என்ற பெட்ரோல் கழிவுடன் தேங்காய் எண்ணெய் எஸ்சென்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன? 
தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !
பெட்ரோல் பொருள்களின் கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமேரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்விட் பேரபின் ஆகும். கச்சா எண்ணெயின் அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும்.

கச்சா எண்ணெயை சுத்தகரித்து, பெட்ரோல், டீசல், கேரோஸின், நாப்தலின், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருள்கள் எடுக்கப்பட்டு எஞ்சி இருபபது மினரல் ஆயில்.

காலிபிளவவர் ரோஸ்ட் செய்வது எப்படி?

இதற்கு நிறமோ, மணமோ கிடையாது. இதன் அடர்த்தி அதிகம். எந்த வகை எண்ணெயுடனும் எளிதில் கலப்படம் செய்யலாம்.

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா வரை ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை எல்லா விதமான முகலோஷன்கள் வரை, இந்த மினரல் ஆயில் பயன்படுகிறது என்பது வேதனையான விஷயம்.

மினரல் ஆயில் சேர்ப்பதால் வரும் பக்க விளைவுகள்.. 

1. தோல் வறண்டு போகும்.

2. முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.

3. முடி கொட்டும்.

4. சீக்கிரம் நரை விழும்.

5. அரிப்பு வரும். இந்த தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்..
Tags:
Privacy and cookie settings