உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?

வங்கி சேமிப்பு கணக்கில் ( savings Bank account ) பெரும் தொகையை வைத்தி ருப்பவரா நீங்கள்? அதனை நீங்கள் தீவிரமாக கண் காணிப்ப தில்லையா?, உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?,
உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?
தொடர்ந்து படியுங்கள்! நம்மில் பலர், வேலை ப்பளு, நேரமின்மை போன்ற காரணங் களால் நமது வங்கி சேமிப்பு கணக்கினை அதிகம் கண் காணிப்ப தில்லை.

பல சந்தர்ப்பங்களில் அதில் அதிகமா கவே பணம் இருப்பதுண்டு. இந்த வகை கணக்கில் இருப்பு வைக்கும் தொகைக்கு வங்கிகள் மிக குறைந்த வட்டி யையே ( Interest ) வழங்கு கின்றன.

எனவே, பெரிய அளவில் இந்த கணக்கில் பணத்தை விட்டு வைத்தால் அது வளராமல் முடங்கிப் போகும். இந்த பிரச்ச னைக்கு தீர்வாக வங் கிகளில் `ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட்’ Auto sweep account என்றொரு வசதி இருக்கிறது.

உங்களது சேமிப்பு கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணமி ருந்தால் அதனை புதிய ஒரு நிரந்தர வைப்பு நிதி கணக்கி ற்கு மாற்றம் செய்து கொள்ளும் வசதிக்கு `ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட்’ என்று பெயர்.
சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வாடிக்கை யாளர்கள் இந்த `ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட்’ Auto sweep account வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம்.

தற்போது, சேமிப்பு கணக்கிற்கு, வங்கிகள் வெறும் 4 சதவீத வட்டியையே வழங்கி வரு கின்றன. உதாரணமாக, 180 நாட்க ளுக்கு நிரந்தர வைப்பு நிதி Fixed deposit திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.

இந்த ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட் வசதி மூலம் உங்கள் சேமிப்பு இரு மடங்கு வேகத்தில் வளர வாய்ப் பாகிறது. உங்கள் கணக்கில் ரூ.50 ஆயிரம் இருப்பதாக வைத்துக் கொள்ளு ங்கள்.

உங்கள் சேமிப்பு கணக்கில் அதிக பட்சமாக 10 ஆயிரம் ரூபாய் தான் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். 

கணக்கில் ரூ.10 ஆயிரத்துக்கு மேலுள்ள ரூ.40 ஆயிரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தி ற்கு நிரந்தர வைப்பு நிதியாக மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?
ஒருவேளை சேமிப்பு கணக்கில் இந்த குறைந்த பட்ச தொகையான ரூ.10 ஆயிரம் அளவை விடவும் குறைந்து போனால், இந்த குறைவினை ஈடுகட்ட நிரந்தர வைப்பு நிதியிலுள்ள ரூ.40 ஆயிரத்திலிருந்து 

பணம் எடுக்கப் பட்டு சேமிப்பு கணக்கில் வரவு வைக்க ப்பட்டு குறைந்த பட்ச தொ கையான ரூ.10,000 அதே அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ப்படும். இந்த சேவை க்கு வங்கிகள் கட்டணம் வசூலிப் பதில்லை.
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி செய்முறை !
ஒரு வேளை, நிரந்தர வைப்பு நிதி கணக்கை முதிர் வுக்கு முன்னால் முடித்துக் கொள்ள, வாடிக்கை யாளர், விரும் பினால் அனுமதிக்க ப்பட்ட வட்டி வீதத்தில் அதிக பட்சமாக ஒரு சதவீதம் வரை குறை யலாம்.

 சேமிப்பு கணக்கில் குறைந்த வட்டியை பெற்று வந்த உங்கள் பணம், இந்த வசதியின் மூலம், நிரந்தர வைப்பு நிதி கணக் கிற்கு தரப்படும் உயர் வட்டி வீதத்தின்

அடிப்ப டையில் வேகமாக வளரும். ஒவ்வொரு வங்கியும் Bank வெவ்வேறு பெயர்களில் இவ்வசதியை தங்களது வாடிக்கை யாளர் களுக்கு வழங்கி வருகின்றன.
Tags:
Privacy and cookie settings