இன்டர்நெட் பயன் படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத் தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர்.
இவற்றின் மூலம் அனைவரும் பயன் பெறுகி ன்றனர். உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக் களையும், தனி நபர் எண்ணங் களையும் பரிமாறிக் கொள்கின்றனர்
இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்தி ரத்தில் தலையீடு வோரும் இங்கே காணப் படுகின்றனர். இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டி யுள்ளது.
இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்தி ரத்தில் தலையீடு வோரும் இங்கே காணப் படுகின்றனர். இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டி யுள்ளது.
அதே நேரத்தில் மற்றவர் களின் உணர்வு களுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது.
இதற்கென நாம் சில அடிப்படை கோட் பாடுகளைக் கடைப் பிடித்தால் அது அனைவ ருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.
1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு: என்ன தான் நம் நண்பர் களுடன் நம் உணர்ச்சி களைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வது தான் நாகரிக மானது.
ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல் களை, வெளிப்படுத்து கின்றனர்.
நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக் குள்ளாக்கும் காதல் பிரச்னை களை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத் தான் ஏற்படுத்தும்.
எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.
2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல: இணைய த்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப் படுத்தவும் தரப்பட்டி ருக்கும் ஓர் இடம் தான்.
ஆனால், அதனையே நம் பிரச்சார மேடை யாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கை களே, கருத்துக் களே சரி என்ற அளவில் இயங் குவது தவறா னதாகும்.
உங்கள் ஒழுக்க, அரசியல் கோட் பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளு ங்கள்.
மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத் துடன் வெளியிடுவது தவறு.
3.குற்றச்சாட்டுக் கான மேடையா இது?: சிலர் நுகர்வோர் பிரச்னை களுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னை களை தெரிவிக்கலாம்.
ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவன த்திற்கு எதிரான கருத்துக் களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளை விக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.
4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா? : இணைய த்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன.
ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிரு க்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கி ன்றன.
ஆனால், ஒரு சிலர் தங்களு க்குத் தான் முதலில் தெரிந்த தாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல் களைத் தெரிவிக் கின்றனர்.
இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத்தளங்களின் இடத்தையும் வீணடிக் கிறீர்கள்.
5.மேற் கோள்கள் தேவையா?: சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப் பார்கள்.
தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவ தனை நிறுத்திக் கொள்ள லாமே.
6. வீணான பெருமை வேண்டாமே!: சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற் காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்பு வார்கள்.
இதனால் என்ன நேரப் போகிறது. உண்மை யிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக் கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக் குங்கள்.
நட்பு வட்டத்தில் உள்ளவ ர்களிடம் ஆரோக்கி யமான உறவினைப் பலப்படு த்துங்கள்.
7.உங்களுக்கு தகவல், மற்ற வருக்கு குப்பை?: சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்பு டையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன் படாததாக இருக்கலாம்.
அவற்றை அனைவ ருக்கும் அனுப்புவ தனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.
8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?: என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கி ன்றனர்.
மத ரீதியாக சிலர் மனதை அவை புண் படுத்தலாம். நாகரிக அடிப்படை யில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம்.
எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா.
அவர்கள் உங்கள் மீது வைத்தி ருக்கும் நம்பிக்கை யினை பாழ்படுத்த வேண்டாமே.