கணினிபற்றி தெரிந்ததும் தெரியாததும் !

எல்லாக் கணினிகளின் உள்ளேயும் ஒரு ஹாட் டிஸ்க் ட்ரைவ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். டேட்டாவை கணினியின் உள்ளே நிரந்தரமாகச் சேமிக்கக் கூடிய ஒரு சாதனமே ஹாட் டிஸ்க் ட்ரைவ்.
கணினிபற்றி தெரிந்ததும் தெரியாததும் !
கணினி இயக்கத்திலிருக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ ஹாட் ட்ரைவில் பதியப்பட்டுள்ள டேட்டா எந்தவித இழப்புக ளுமின்றிப் பாதுகாப்பாக இருக்கும்.

அதாவது மின்சக்தி இல்லாமலேயே ஹாட் ட்ரைவிலுள்ள டேட்டா பாதுகாக்கப் படுகிறது. கணினியில் உள்ள மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக ஹாட் ட்ரைவ் கருதப் படுகிறது. 

எனெனில் இயங்கு தளம் (operating system) , எப்லிகேசன் மென்பொருள், மற்றும் டேட்டா என அனைத்தும் இந்த ஹாட் ட்ரைவிலேயே சேமிக்கப் படுகின்றன. 

ஹாட் ட்ரைவ் முறையாக செயற்பட மறுக்கும் போது இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்ற முடியாமல் போய் விடுகிறது.

அதாவது கணினியை பூட் செய்ய முடியாது போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினி ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்த சந்தர்ப்பங்களை நீங்களும் எதிர் கொண்டிருக்கலாம்.
ஹாட் ட்ரைவ் பற்றிப் பேசும்போது ப்லேட்டர்ஸ், ‘ஆம்ஸ்’ மோட்டர் ட்ரேக்ஸ், செக்டர்ஸ் எனப்பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் கேட்டிருக்கலாம்.

ப்லேட்டர்ஸ் (platters) எனப்படுவது காந்தப் புலம் கொண்ட வட்ட வடிவிலான தட்டுகளைக் குறிக்கிறது. ஒரு ஹாட் ட்ரைவ் பல ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும். 

ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவைச் சேமிக்கின்றன. 

எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் ட்ரைவ் குறைந்த கொள்ளளவு கொண்ட ஹாட் ட்ரைவை விடவும் அதிக எண்ணிக்கை யிலான ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும்.

ஹாட் ட்ரைவின் கொள்ளவு பைட்டில் அளவிடப்படுகிறது. தற்போது ஒரு டெறா பைட் (1 TB = 1024 GB) அளவிலான ஹாட் டிஸ்க் ட்ரைவ்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரே மத்தியைக் கொண்ட பல வட்டப் பாதைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதனையே ட்ரேக்ஸ் (Tracks) எனப்படுகிறது. இந்த ட்ரேக்ஸிலேயே டேட்டா பதியப்படுகின்றன.

ட்ரேக்ஸ் ஆனது செக்டர்ஸ் (sectors) என மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.ப்லேட்டரிலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் கை போன்ற அமைப்பை ‘ஆம்’ (arm) எனப்படுகிறது.

கணினிபற்றி தெரிந்ததும் தெரியாததும் !
காந்தப் புலம் கொண்டு தகவல்களைப் ப்லேட்டரில் (read) படிப்பதற்கும் பதிவதற்குமான (write) ரீட் ரைட் ஹெட்டை (read/write head) இந்த ‘ஆம்’ கொண்டுள்ளது.

ஒவ்வொரு ப்லேட்டரும் அதற்குரிய ஆமைக் கொண்டிருக்கும். அதன் மூலம் டேட்டா ஹாட் டிஸ்கில் பதியப்படும்.

ப்லேட்டர்களை சுழற்றுவதற்கான மோட்டார் (Motor) ஒன்றையும் ஹாட் ட்ரைவ் கொண்டுள்ளது. 

இந்த மோட்டார் ஒரு நிமிடத்தில் 4500 லிருந்து 15000 வரையிலான சுழற்சிகளை உருவாக்கக் கூடியவை. மோட்டரின் வேகம் RPM இல் (Rotations Per Minute) அளவிடப்படுகிறது.

சுழற்சிகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் போது ஹாட் ட்ரைவிலிருந்து விரைவாக டேட்டாவை அணுகலாம்.

ஹாட் ட்ரைவிலிருந்து டேட்டாவைப் படிக்கும் போது அல்லது மீளப் பெறும் போது, மோட்டரானது ப்லேட்டர்களைச் வேகமாகச் சுழற்றும்.

அதே வேளை அதிலுள்ள ‘ஆம்’ எனப்படும் பகுதி டேட்டா பதியப்பட்டுள்ள உரிய பகுதியை நோக்கி தானாக அசையும். 

ஆமிலுள்ள ஹெட் ஆனது காந்தப் புலம் கொண்ட பிட்டுகளை இனம் கண்டு கணினியால் கையாளக் கூடிய டேட்டாவாக மாற்றிக் கொடுக்கிறது.

அதே போன்று டேட்டாவைப் பதியும் போது ஆமிலுள்ள ஹெட்டிலிருந்து காந்தப் புலத் துடிப்புகளை அனுப்பி ப்லேட்டரில் காந்தப் புல பண்புகளை மாற்றியமைக்கும். 

அதன் மூலம் ஹாட் ட்ரைவில் டேட்¡ பதியப்படும். ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு தகவலைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை லேடன்சி (latency) எனப்படுகிறது.
அதிக வேகம் கொண்ட ஹாட் ட்ரைவ், குறைந்த லேடன்சியைக் கொண்டிருக்கும். அதாவது 7200 rpm கொண்ட ஹாட் டிஸ்க் ட்ரைவ் 4.2 ms (மில்லி செகண்ட்) லேடன்சியைக் கொண்டிருக்கும்.

ப்லேட்டர் சுழலும் வேகம் தவிர ப்லேட்டரிலுள்ள ரீட் ரைட் ஹெட்டை உரிய டேட்டாவை நோக்கி நகர்த்த எடுக்கும் நேரமும் ஹாட் ட்ரைவிலிருந்து டேட்டாவைப் படிப்பதில் பாதிப்பைச் செலுத்தும் காரணியாக உள்ளது.

இதனை சீக் டைம் (Seek Time) என்படுகிறது. இந்த நேர அளவு குறைவாக இருத்தல் அவசியம். ஹாட் ட்ரைவைக் கணினியில் பொருத்துவதற்கென சில இடை முகப்புகள் Interface உள்ளன.

ஹாட் ட்ரைவிலுள்ள இந்த இடை முகப்பு மதர் போர்டுடன் பொருந்த வேண்டும். 

தற்போது ஹாட் ட்ரைவை மதர் போர்டுடன் பொருத்துவதற்கு IDE, SATA, SCSI என மூன்று வகையான இடை முகப்புகள் பாவனையிலுள்ளன.

பொதுவாகப் பாவனையிலுள்ள யிளிரி IDE (Integrated Drive Electronics) or ATA Advanced Technology Attachment) எனும் இடை முகப்பாகும். இதன் மூலம் 100 Mbps வரையிலான வேகத்தில் டேட்டாவைக் கடத்தலாம். 

எனினும் தற்போது இந்த இடை முகப்பு பாவனையிலிருந்து குறைந்து வருகிறது. IDE இடை முகப்பிலிருந்து மாறி தற்போது ஹாட் ட்ரைவ்கள் ஷிதிஹிதி (Serial Advanced Technology Attachment ) எனும் இடை முகப்புடன் வருகின்றன.

இவை 100 முதல் 300 Mbps வரை வேகத்தில் டேட்டாவைக் கடத்த வல்லன.தற்போது எல்லா கணினி தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில் நுட்பத்தையே பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
ஸ்கசி எனப்படும் இடை முகப்பு அநேகமாக சேர்வர் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்கசி ஹாட் ட்ரைவ்கள் அதிக RPM வேகத்தைக் கொண்டவை.

ஹாட் டிஸ்க் ட்ரைவ் பற்றி முக்கியமாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது யாதெனில், எப்போதோ ஒரு நாள் அது முறையாக இயங்காமல் பழுதடைந்து உங்கள் காலை வாரி விடப்போகிறது என்பதுதான்.

எனவே இது போன்ற சந்தர்ப்பங்களுக்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாராக இருத்தல் வேண்டும். 

 அதனால் உங்கள் முக்கியமான பைல்களை சீடி, டீவிடி போன்ற வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக பேக்கப் (back up) செய்து வைத்திருத்தல் அவசியம்.
Tags:
Privacy and cookie settings