லைவ் டிஷ்ஷாக உயிருள்ள ஆக்டோபஸ் குட்டியை கடித்து விழுங்கும் பயங்கரம் தென்கொரியாவில் பிரபலமாகி வருகிறது.எட்டு கைகளையும் அசைத்தபடி தட்டில் அசைந்து கொண்டிருக்கும்
ஆக்டோபசை அப்படியே உயிரோடு பிடித்து கடித்து சாப்பிடும் வித்தையை ‘லைவ் ஆக்டோபஸ்' உணவு என தென்கொரியாவில் அழைக்கி றார்கள்.
வெளிநாட்டு ’8’ பூச்சி.... இரண்டு கண்களுடன் கூடிய தலை, 8 கை உள்ள கடல்வாழ் உயிரினம் ஆக்டோபஸ்.
அமெரிக்கா வின் ஹவாய் தீவுகள், ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகளில் ஆக்டோபஸ் பிரதான கடல் உணவாக உண்ணப்படுகிறது.
நாம மீனு, நண்டு சாப்பிடுற மாதிரி... ஆக்டோபசை கொண்டு ஜப்பானில் சுஷி, டகோயகி, அகாஷியகி, ஸ்பெயினில் பால்போ பெய்ரா, பல்பெரியாஸ் என்று பல்வேறு வகை உணவுகள் தயாரிக்கப் படுகின்றன.
சன்னாக்ஜி’ அல்லது ‘நாக்ஜி’... தென்கொரியாவில் ஆக்டோபசை கொண்டு தயாரிக்கப் படும் உணவு ‘சன்னாக்ஜி' அல்லது ‘நாக்ஜி'.
உயிரோட ஒரு ’லாலிபப்’.... கண்எதிரே ஆக்டோபசை பீஸ் பீஸாக வெட்டி தட்டில் போடுவார்கள். நெளிந்து நெளிந்து உயிரை விடும் ஆக்டோபஸ் துண்டுகளை லாவகமாக எடுத்து லாலிபப் மாதிரி சாப்பிடுவா ங்களாம்.
ஓட்டலில் இருக்கும் மீன்தொட்டிகளில் குட்டியூண்டு ஆக்டோபஸ் கள் நீந்துகி ன்றன. ஆர்டர் செய்ததும் அதில் ஒன்றி ரண்டை பீங்கான் கோப்பையில் போட்டு டேபிளில் வைக்கிறார் கள்.
கால்கள் பரப்பி நெளியும் ஆக்டோபசை கொத்தாக பிடித்து பம்பரத்தில் கயிறு சுற்றுவது போல, சாப் ஸ்டிக்கில் சுற்றி.. கிரேவி, சாஸில் லேசாக முக்கி.. அப்படியே ‘லபக்'.
சத்து அதிகமாம்... ‘ஆக்டோபசில் வைட்டமின் பி3, பி12, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலனியம் அதிகம்.
அடுப்பில்லா சமையல்... அதன் மீது சேறு அதிகம் ஒட்டியிருக்கும் என்பதால், நன்கு கழுவி விட்டு சமைக்க வேண்டும். குடலை பிரட்டும் வாசம் அடிக்கும். ஒருவித திரவத்தை வெளியேற்றும் என்பதால்
நன்கு சமைத்து விட்டே சாப்பிட வேண்டும்' என்று கூறப்பட்டு வந்த நிலையில், உயிர் உள்ள ஆக்டோபஸ் டிஷ் தென்கொரி யாவில் பிரபலமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அதுக்கெல் லாம் தைரியம் வேணும்ங்க... லைவ் ஆக்டோபஸ் டிஷ் பற்றி அனுபவஸ்தர்கள் கூறுகையில், ‘விலங்குகளை உயிரோடு பிடித்து சாப்பிட தனி துணிச்சல் வேண்டும்.
நொளுநொளு என்று நகரும் ஆக்டோபசை தின்பதற்கு இன்னும் அதிக தைரியம் வேண்டும்.
வழுக்கும்... ஆனா விடமாட்டோமே... பவுலில் இருந்து லாவகமாக எடுத்து, வழுக்கி கீழே விழுந்து விடாதபடி சாப்பிடுவது தனி கலை.
ஆக்டோபஸ் ஸூம் லேசுபட்ட தில்ல... கொஞ்சம் அசந்தால் உயிருக்கு வேட்டு வைத்து விடும் ஆபத்தும் இங்கு இருக்கிறது.
பொந்து, துளை இருந்தால் உடனே மொத்த உடலையும் அதற்குள் திணித்துக் கொள்கிற இயல்பு ஆக்டோபசு க்கு உண்டு. அதனால், வாய்க்குள் போட்டதும் கடித்து விட வேண்டும்.
கவனக் குறைவாக, வாயில் போட்டதும் விழுங்கி விட்டால், உயிரோடு இருக்கும் ஆக்டோபஸ் நமது தொண்டையை அடைத்துக் கொண்டு உயிரை பறித்து விடும்' என்றனர்.
கவனக் குறைவாக, வாயில் போட்டதும் விழுங்கி விட்டால், உயிரோடு இருக்கும் ஆக்டோபஸ் நமது தொண்டையை அடைத்துக் கொண்டு உயிரை பறித்து விடும்' என்றனர்.