சோப்பு என்ற பொருள் அந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் ஒன்றி விட்டது. அப்படிபட்ட சோப்பு எப்படி செயலாற்றுகிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா ?
இதோ இந்த எளிய பரிசோதனை சோப்பின் அடிப்படையை எப்படி விவரிக்கின்றது என்பதை பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
• ஒரு தட்டு போன்ற கிண்ணம் (சாசர்)
• சிறிதளவு பால்
• உணவில் உபயோகிக்கும் வண்ணம் (நான்கு வெவ்வேறு வண்ணங்கள்)
• சோப்பு (திரவ சோப்பு எனில் நல்லது)
செய்முறை:
• உணவில் உபயோகிக்கும் வண்ணம் (நான்கு வெவ்வேறு வண்ணங்கள்)
• சோப்பு (திரவ சோப்பு எனில் நல்லது)
செய்முறை:
1. சாசரில் பாலை ஊற்றி வைக்கவும்.
2. வண்ணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு சொட்டுக்கள் பாலின் மையப்பகுதியில் சிறிது சிறிது இடைவெளி விட்டு விடவும்.
(இந்த வண்ணங்கள் நம் பகுதிகளில் பவுடராகவே கிடைக்கின்ற படியால் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக
ஒரு சிறிய ஸ்பூனில் போட்டு சில துளிகள் தண்ணீர் விட்டு குளப்பிக் கொண்டு ஒரு குச்சி அல்லது ஸ்பூனை கொண்டு ஒரு சொட்டு விடவும் )
ஒரு சிறிய ஸ்பூனில் போட்டு சில துளிகள் தண்ணீர் விட்டு குளப்பிக் கொண்டு ஒரு குச்சி அல்லது ஸ்பூனை கொண்டு ஒரு சொட்டு விடவும் )
3. பிறகு திரவ சோப்பை எடுத்து ஒரு சொட்டு அந்த வண்ணங்களுக்கு நடுவில் விடவும் பிறகு நடக்கும் அற்ப்புதத்தை பாருங்கள் !
சோப்புத்துளி பட்டவுடன் பாலின் மேற்ப்பரப்பு அற்புதமான வண்ணக் கலவையாகி ஒரு வண்ணச் சுருளாக மாறி நகர்வதை காணலாம்.
காரணிகள்:
திரவங்களில் மேற்ப்பரப்பில் ஏற்ப்படும் புறப்பரப்பு விசையால் (Surface Tension) ஒன்றாக ஈர்க்கப்பட்டு இருக்கும். இது பாலின் மேற்ப்பரப்பின் சருகு போல் செயல்பட்டு பாலை ஒரு குட்டையில் இருப்பதுபோலாக்குகிறது.
சோப்புத்துளி பாலில் பட்ட நொடியில் பாலின் புறப்பரப்பு விசையை உடைபடுகிறது.
புறப்பரப்பு விசை உடைந்ததன் விளைவால் பாத்திரதின் ஓரத்தில் இருந்த புறப்பரப்பு
விசை நடுவில் உள்ள பாலை ஓரத்திற்க்கு இழுக்கிறது. ஓரங்களை நோக்கி நகரும் பால் தன் மேல் இருக்கும் வண்ணத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு செல்கிறது.
சோப்பின் தாக்கம் இருக்கும் வரை வண்ணம் நகர்ந்து கொண்டே இருப்பதை காணலாம்.
சோப்பின் இந்த புறப்பரப்பு விசையை (Surface Tension) உடைக்கும் தன்மைதான் அதண் செயலாற்றல்களின் முக்கிய காரணியாக செயல்படுகிறது.