ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?

Skype தொலைத்தொடர்பு சேவையில் மிகச்சிறந்த பங்காற்றி வருவது அனைவரும் அறிந்ததே. 
ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?
கடந்த 2011 ஆம் ஆண்டு வரை 663 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டதோடு நாளுக்கு நாள் Skype இன் உபயோகம் அதிகரித்து வருகிறது.

வரைமுறையற்ற இலவசமான பாவனையை வழங்குவதோடு தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க மாத்திரம் குறிப்பிட்ட அளவு பணத்தினை அறவிடுகிறது.

இவ்வாறு பல வழிகளிலும் உச்சத்தில் இருக்கும் Skype இல் இதுவரை காலமும் இதில் இருந்த ஒரு குறை பல Skype கணக்குகளை ஒரே கணினியில் கையாள முடியாது என்பதே.

ஆனால் தற்போது அதற்கு ஓர் தீர்வு கிடைத்துள்ளது.Multi Skype Launcher என்னும் சிறிய, இலவச மென்பொருளை நிறுவுவதன் மூலம் பல கணக்குகளை ஒரே கணினியில் பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் Skype 4 மற்றும் .NET Framework 3.5 ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். தரவிறக்க
1.Skype

2. NET Framework

அடுத்து Multi Skype Launcher மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவிய பின்னர் Open செய்யுங்கள். 

இதன் போது உங்கள் Skype பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை கேட்கும். அவற்றை கொடுத்து Login பண்ணிக் கொள்ளுங்கள்.
Add More Option ஐ பயன்படுத்தி எத்தனை Skype கணக்குகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். 

கணக்குகளை Add பண்ணி முடிந்ததும் தேவையான Skype கணக்கை தெரிவு செய்து Launch பட்டனை கிளிக் பண்ணி புதிய விண்டோவில் அந்த கணக்கை திறந்து கொள்ளலாம்.

இப்படி ஒவ்வொரு Skype கணக்கையும் தனித்தனி விண்டோவில் திறந்து பயன்படுத்தலாம். குறிப்பு : அதிகளவான Skype கணக்குகளை ஒரே தடவையில் திறப்பதை தவிர்ப்பது சிறந்தது.

அவ்வாறு திறந்தால் அது கணினியின் வேகத்தை பாதிக்கும். 3 – 4 கணக்கிற்கு மேல் திறப்பதை தவிருங்கள். இது ஒரு பாதுகாப்பான மென்பொருளாகும்.
Tags:
Privacy and cookie settings