பெண்ணுறுப்புக்குள் வைத்து துப்பாக்கியை கொண்டு சென்ற பெண் !

1 minute read
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர், துப்பாக்கி யொன்றை தனது பெண்ணுறுப்புக்குள் ஒளித்துக் கொண்டு சிறைச் சாலைக்குள் கடத்திச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
34 வயதான ஜோசப்பின் மெக்அலிஸ்டர் எனும் பெண்ணே உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவ்வாறு துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளார்.

இவர் திருடப்பட்ட கடன் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தார். 

இதன் போதே துப்பாக்கியையும் பெண்ணுறுப்புக்குள் வைத்துக் கொண்டு சிறைக்கு சென்றார். நான்கு சிறைக் காவலர்கள் அப்பெண்ணை சோதனையிட்ட போதிலும் அவர்கள் இத்துப்பாக்கியை காணவில்லை. 

பின்னர் குப்பைக்கூடையொன்றுக்குள் துப்பாக்கி இருப்பதாக மற்றொரு கைதி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பின்னரே இவ்விடயம் அம்பலமாகியது.
தான் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட முழு நேரமும் இவ்வாறு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் 

மேலும் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேரிடலாம் என்பதால் அவர்களிடம் கூறுவதற்கு தயங்கியதாகவும் ஜோசப்பின் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings