இள­வ­ரசி சார்லொட் 10 ஆவது வயதில் எவ்­வாறு இருப்பார்?

1 minute read
பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்தரீன் தம்பதிக்கு புதிதாக பிறந்த குழந்தையான இளவரசி சார்லொட் எலிஸபெத் டயானா, தனது 10 ஆவது வயதில் எவ்வாறு இருப்பார்.
இளவரசி சார்லொட் 10 ஆவது வயதில் எவ்வாறு இருப்பார்?
என்பதை வெளிப்படுத்தும் உருவப்படமொன்றை அமெரிக்க ஓவிய நிபுணரான ஜோ முல்லின்ஸ் பிந்திய கணினி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியம் மற்றும் கத்தரீனது புகைப்படங்களை தீவிர ஆராய்ச்சிக்குட்படுத்திய பின்னரே புதிய இளவரசியின் உருவப்படத்தை ஜோ முல்லின்ஸ் வரைந்துள்ளார்.

பிறந்து நான்கு நாட்களேயான இளவரசி தனது 10 ஆவது வயதில் தனது தாயாரான கத்தரீனுக்குரியதை ஒத்த கேசம் மற்றும் மூக்குடன் இந்த உருவப்படத்தில் காணப்படுகிறார்.
அத்துடன் புதிய இளவரசி தனது தந்தை யினதும் தாயினதும் கண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பச்சை நீல நிற கண்களைக் கொண்டிருப்பார்

 என எதிர்வு கூறியுள்ள ஓவிய நிபுணர், சிறுமியான இளவரசி அவரது தந்தை வில்லியத்தினு டையதையொத்த உதட்டைக் கொண்டிருப் பார் என தெரிவிக்கிறார்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings