10000 ஆண்டுகளைத் தாண்டியும் உறையாதிருக்கும் குருதி !

ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப்பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
10000 ஆண்டுகளைத் தாண்டியும் உறையாதிருக்கும் குருதி !

இவ்வுடல் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசி பேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் 
அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

தற்போது 10,000 வருடங்கள் பழைமை யானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக் கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிர வைத்துள்ளது. குறித்த மெமத் 60 வயதாக இருக்கும் போது உயிரிழந்தி ருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சி யாளர் செம்யொன் கிரி கோர்யெவ் தலைமை யிலான ரஸ்ய மற்றும் கொரிய நாட்டுக் குழுவே இதனைக் கண்டு பிடித்து ள்ளது.

தென்கொரி யாவும், ரஸ்யாவும் அழிந்து போன மெமத்தினை மீண்டும் உருவாக்கும் கூட்டு ஒப்பந்த மொன்றில் கடந்த வருடம் கையெழுத் திட்டிருந்தன.
மெமத்தின் உடலை மூடியிருந்த பனிக் கட்டியை அகற்றி யதும் அதன் வயிற்றிலிருந்து இருண்ட நிறத்தில், கனமான இரத்தம் வடிந்து வருவதை ஆராய்ச்சி யாளர்கள் கண் டுள்ளனர்.
இரத்தம் திரவ நிலையிலேயே இருந்தமை, அதன் தசை இழையமும் புதிய இறைச்சியைப் போல சிகப்பு நிறத்திலேயே இருந்தமையும் 

தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக செம்யொன் கிரிகோர்யெவ் தெரிவித் துள்ளார்.

பொதுவாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பிர தேசங்களில் வாழும் சில உயிரினங்கள் பனியில் தமது உடல் இழையங்கள் உறைவதைப் பாதுகாக்கும் பொருட்டு 

கிரயோபுர டெக்டன்ட் ‘cryoprotectant’ எனும் இரசாயன த்தை உடலில் சுரக்கும் இயல் பினைக் கொண்டு ள்ளன.

மெமத்தின் குருதியிலும் கிரயோ புரடெக்டன்ட் இராசயனம் அடங்கியிருக்கக் கூடுமெனவும் அதன் காரணமாகவே 

தற்போது கண்டு பிடிக்கப்பட்ட மெமத்தில் குருதி உறையாமல் திரவ நிலையில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இரத்தத்திற்கு மேலதி கமாக பற்கள், எலும்புகள், தசை இழை யங்கள் ஆகிய வற்றையும் ஆராய்ச்சி யாளர்கள் சேகரித் துள்ளனர்.

இத்தகைய கண்டு பிடிப்புகள் எதிர் காலத்தில் மெமத்தை குளோனிங் முறை யில் மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு புத்துணர்வு அளிக்குமென தெரிவிக்கப் படுகின்றது.


இது மட்டுமன்றி ‘மெமத்’ இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியு மென ஜப்பானிய விஞ்ஞா னியொருவர் கடந்த சில வருடங் களுக்கு முன்னர் தெரிவித் திருந்தார்.
முகேஷ் அம்பானி கார் பற்றி தெரிந்து கொள்ள !
ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே ஒரு மெமத் தினை வெறும் 4 வருடங் களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளி யிட்டார்.

இதற்காக சிதை வடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக் கொள்ளவு ள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்க முடியுமென அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
Tags:
Privacy and cookie settings