ஆபிரிக்கா வின் வட பிராந்தியத் திலுள்ள மௌரிட்டானியா எனும் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 55 தடவைகள் தான் திருமணம் செய்து கொண்டு ள்ளதாக தெரிவித் துள்ளார்.
திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக மௌரிட்டா னியா உள்ளது.
ஆனால், 50 வயதான மேற்படி பெண் 55 தடவைகள் திருமணம் செய்து ள்ளதாக அல்சால் எனும் தொலைக் காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித் துள்ளார்.
மிக இளம் வயதிலேயே தான் முதல் தடவையாக திருமணம் செய்த தாகவும் அதன்பின் பல்வேறு விதமான ஆண்களை தான் திருமணம் செய்த தாகவும் அவர் கூறுகிறார்.
இவர்களில் ஒரு நபருட னான திருமண வாழ்க்கை மாத்திரம் 15 வருடங் களாக நீடித்தது. ஏனைய திருமண வாழ்க்கை பெரும் பாலும் இரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை நீடித்த னவாம்.
மற்றொரு நபருடனான திருமண வாழ்க்கை இரு தினங்கள் மாத்திரம் நீடித்ததாக இவர் தெரிவித் துள்ளார்.
தான் திருமணம் செய்த நபர்களின் பொறாமை க்குணம் மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியனவே திருமண வாழ்க்கை முறிவடை வதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
தனது கணவர் மார் அனைவ ரினதும் பெயர்களை நினைவில் வைத்துள்ள இப்பெண், அவர்களில் மூவருடனான வாழ்க்கை யில் மாத்திரம் தான் பாதுகாப்பை உணர்ந்த தாகவும் கூறியுள்ளார்.
Tags: