4.24 கிலோ எடையுள்ள வான் கோழியை உட்கொண்டு சாதனை !

வான் கோழி உண்ணும் போட்டியில் பங்குபற்றிய ஒருவர் முழு வான் கோழியொன்றை உட்கொண்டு பலரையும் திணற வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.
4.24 கிலோ எடையுள்ள வான் கோழியை உட்கொண்டு சாதனை !
உலக வான் கோழி உண்ணும் போட்டி அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தின் மஷான்டுக்கெட் நகரில் அண்மையில் நடை பெற்றது.

இப்போட்டியில் ஜோய் செஸ்னட் என்பவர், 4.24 கிலோகிராம் (9.35 இறாத்தல்) எடையுள்ள வான் கோழி இறைச்சியை உட்கொண்டு முதலிடம் பெற்றதுடன் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

இவர் 10 நிமிடங்களில் 4.24 கிலோ இறைச்சியை உட்கொண்டார். 2011 ஆம் ஆண்டு சோன்யா தோமஸ் என்பவர் 2.38 கிலோ கிராம் வான் கோழி இறைச்சியை உட்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்தது.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்னட் இன்று செவ்வாய்க்கிழமை தனது 31 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடு கின்றமை குறிப்பிடத் தக்கது.

அவருக்கு 5000 அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்பட்டது.
Tags:
Privacy and cookie settings