ஆங்கில மொழியைப் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, அதனை உச்சரிக்கும் விதம் குறித்துத் தான்.
தமிழ் மொழி போல, நாம் எழுதுவதனை உச்சரிக்கும் பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை.
உச்சரிப்பு, இம்மொழியைப் பயன்படுத்துவோர் வெகுநாட்களாகப் பழகி வந்த விதத்திலேயே அமைந்துள்ளது.
நம்மில் பலர், ஆங்கில மொழியை எழுதிப் பயன்படுத்தும் வகையில் நல்ல திறமை பெற்றிருந்தாலும், அதனை உச்சரிக்கும் வகையில் நல்ல வழி காட்டுதல் இன்றி உள்ளனர்.
இந்த குறையைத் தீர்க்கும் வகையில், இணையதளம் ஒன்று இயங்குகிறது. அதன் பெயர் Forvo.
இது இயங்கும் தள முகவரி http://www.forvo.com.

இதன் முகப்பு பக்கத்தில், அன்றாடம் ஆர்வமூட்டும் பல விஷயங்கள் கிடைக்கும். Language of the Day, latest popular pronunciations, the featured Hot Category எனப் பல பிரிவுகள் உள்ளன.
இந்த வகைகளுக்கான டேப்களும் இணைய தளத்தில் தரப்பட்டு, அவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை எளிமையாக்குகின்றன.
இந்த வகைகளுக்கான டேப்களும் இணைய தளத்தில் தரப்பட்டு, அவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை எளிமையாக்குகின்றன.
Categories என்ற ஒரு பிரிவில், நாம் உச்சரிப்பு தேடும் சொற்களின் (food, medicine, people, music, holidays, and sports) வகையைக் காட்டுகிறது.
நீங்கள் குறிப்பிட்ட சொல் ஒன்றின் உச்சரிப்பினைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அச்சொல்லினைத் தேடிப் பெற, தேடல் கட்டம் ஒன்றும், மேலாக வலது பக்கத்தில் தரப்பட்டுள்ளது.
இதில் சொல்லை டைப் செய்து, தேடிப் பெற்றவுடன், அருகில் உள்ள பிளே பட்டனை அழுத்தியவுடன் உச்சரிப்பு ஒலிக்கப்படுகிறது.

உங்களுடைய உச்சரிப்பினைப் பதிவு செய்து போட்டுப் பார்த்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா? இதற்கு நீங்கள் இந்த தளத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.
இது இலவசமே. யூசர் நேம், மின்னஞ்சல் முகவரி ஆகியனவற்றைக் கொடுத்துப் பதிந்து கொள்ளலாம். பச்சை நிறத்தில் உள்ள Join Forvo பட்டனைக் கிளிக் செய்து இந்தப் பணியினை மேற்கொள்ளலாம்.
தகவல்களைக் கொடுத்துவிட்டு Create Account பட்டனை அழுத்தியவுடன், உங்கள் அக்கவுண்ட் உருவாக்கப்படும். பின், எந்த நேரத்திலும், உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் கையாளலாம்.
மொழியைச் சரியாக, அதுவும் அன்றாடம் நாம் புழங்கும் ஆங்கிலத்தினைச் சரியாக உச்சரிப்பதுதானே நல்லது. தளம் சென்று பார்த்து விடுங்கள்.
Tags: