24 கோடி ஆண்டு காலத்துக்கு முந்தைய விலங்குகள் பயன் படுத்திய பொதுக் கழிப்பிடம் ஒன்று அர்ஜெண்டினாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
நவீன கால காண்டா மிருகம் போன்ற டினோடொண் டோசோரஸ் என்ற விலங்கால் இடப்பட்டதாகக் கருதப்படும்
ஆயிரக்கணக்கான புதைபடிமக் கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்த இடத்தை விஞ்ஞானிகள் உலகின் மிகப் பழமையான பொதுக் கழிப்பிடம் என்று வர்ணிக்கின்றனர்.
இந்த ஊரும் விலங்கினங்கள் ஒட்டுண்ணிகளைத் தவிர்க்கவும், தங்களைக் கொல்ல வரும் விலங்குகளை எச்சரிக்கவும் ஒரு யுக்தியாக இது போல ஒரே இடத்தில் கழிவுகளைச் செய்திரு க்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் கூறுகி ன்றனர்.
இந்த சாணக் குவியல்கள் எரிமலைச் சாம்பல் திரையால் பாதுகாக்கப் பட்டிருக் கின்றன.
இவை வரலாற்றுக்கு முந்தைய காலத்து உணவு, அக்காலத்தில் பரவிய நோய்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய தகவல் களைத் தருகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.