ஒரே குடும்பத்தில் மூன்று விநோத பிறவிகள்: திண்டாடும் குடும்பம்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய விரல்களுடன் மூன்று குழந்தைகள் அவதிப்படு கின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த பெரிய செவலையை சேர்ந்த கோவிந்தராஜ் (39), செங்கல் சூலைத் தொழிலாளி. இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன.


இதில் தேவி(13), மகேந்திரன்(8), ஐயப்பன்(7) ஆகிய 3 பேரும் பிறவியி லேயே வினோதமாக பிறந் துள்ளனர். 3 பேரின் கை மற்றும் கால் விரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளது.

இதனால் சாப்பிடுவதற்கும், மற்ற வேலைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனை குணப்படுத்த முடியும் என்றாலும் போதிய பண வசதியில்லாமல் தவித்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி என அடையாள அட்டை வழங்கப்பட்டும், 90% ஊனம் என்று மருத்துவர்களால் சான்று அளிக்கப்பட்டும் அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை கூட இன்னமும் கிடைக்கவில்லை.

இதற்காக பெற்றோர் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

ஒரே குடும்பத்தில் 3 மாற்றுத்திறனாளி மற்றும் வினோத குழந்தைகளை வைத்துக்கொண்டு கோவிந்தராஜ் வறுமையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings