டிஸ்கவரியில் அனகோண்டா உயிருடன் விழுங்கப்போகும் முதல் நபர்!

0
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ‘நான் அனகோண்டா உயிரோடு விழுங்கவிருக்கும் முதல் நபராக இருப்பேன்’ எனும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என தெரிவிக்கப்பட்டுள்ள பால் ரோசொலி எனும் நபர், டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு வீடியோவில், ”நான் அனகோண்டா உயிரோடு விழுங்கவிருக்கும் முதல் நபராக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ‘ஈட்டன் லைவ்’ எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட புரோமோ இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடையை அணிந்திருக்கும் பால் ரோசொலி, அனகோண்டாவால் உயிரோடு விழுங்கப்படுவாரென கருதப்படுகிறது. இது தொடர்பாக பால் ரோசொலி அவரது டுவிட்டர் பதிவில், ‘நான் எப்போதும் விலங்குகளை துன்புறுத்த மாட்டேன். இது எப்படி சாத்தியம் என்பதை அறிய நீங்கள் ஈட்டன் லைவ் நிகழ்ச்சியை பார்க்கவேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி பாம்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் இதனை டிஸ்கவரி கைவிட வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ‘இந்த முட்டாளை உயிரோடு விழுங்கசெய்து, அதன் பின்பு வெளியே எடுக்க அனகோண்டாவின் மொத்த சக்தியும் போய்விடும். கேளிக்கைக்காக விலங்குகளை பயன்படுத்தும்போது அவை பாதிப்பிற்கு ஆளாவதை மறுக்க முடியாது’ என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings