இனிமேல் படிக்கா விட்டால் மாடு கூட மேய்க்க முடியாது |If the cow is no longer even the illiterate can shepherd !

சிறுவர்கள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தால், “நீ படிக்கா விட்டால் மாடு தான் மேய்க்க வேண்டும்” என்பார்கள். ஆனால் இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.


சிட்னி பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் பசுக்களை மேய்க்கும் புதிய ‘ரோபோ’வை வடி வமைத் துள்ளனர்.

இந்த ரோபாவால் பசுக்களின் ஆரோக்கியம் மேம்படு வதாகவும், அதனால் பால் உற்பத்தி அதிகரிக்க சாத்தியக் கூறுகள் இருப்ப தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பல விதமான ‘ரோபோ’வை விஞ்ஞானி கள் வடிவமைத் துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் புதிய ‘ரோபோ’வை அவர்கள் கண்டு பிடித்து ள்ளனர்.

ஆஸ்திரேலியா வின் சிட்னி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் பண்ணை களில் இருந்து மாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண் காணித்து,


மாடுகள் மேய்ந்த வுடன் மாலையில் அவற்றை மீண்டும் பத்திரமாக பண்ணைக்கு அழைத்து வரும் ரோபோக்களை கண்டு பிடித்துள் ளனர்.

இந்த ரோபோக் களை பரிசோதி பதற்காக 100 மாடுகளை மேய்ச்சலு க்கு அழைத்து செல்லும்படி கமாண்ட் செய்யப் பட்டது.

இந்த ரோபோ அதன் வேலையை செய்யும் போது மேய்ச்ச லுக்கு சென்ற மாடுகள் மிரளாமல் மெதுவாக, திரும்பி வந்தன. பெரும் பாலும் மேய்ச் சலுக்கு அழைத்து செல்லப் படும் போது தான் மாடுகள் வேகமாக ஓடி கால்கள் மற்றும் பிற பகுதிகளில் காயம் ஏற்படும்.

இந்த ரோபோவால் மிக குறைந்த வேகத்தில் நகர முடியு மென்பதால் அதற்கேற்ற வேகத்தில் மாடுகளும் நடக் கின்றன.

இதனால் மாடுகளு க்கு காயம் ஏற்படாமல் உடல் ஆரோக்கியம் மேம்படு வதால் பால் உற்பத்தி அதிகரிக்க சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக பால் உற்பத்தி யாளர்கள் கருதுகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings