வை- பை இணைப்பை வழங்கக் கூடிய மின்குமிழ் ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.
இம்மின் குமிழில் மைக்ரோ சிப் ஒன்றை விஞ்ஞானிகள் பொறுத்தி யுள்ளதுடன் இது செக்கனுக்கு 150 மெகாபைட் வேகத்தில் வை-பை இணைப்பை வழங்கக் கூடியது.
இதற்காக விசேட எல்.இ.டி.. மின்குமிழ் ஒன்றை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். ஷங்காய் பூடான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கி யுள்ளனர்.
இத்தொழி நுட்பத்துக்கு லை- பை எனப் பெயரிட்டுள்ளனர். மேற்படி மின்குமிழ் வழங்கும் வை- பை மூலம் 4 கனணிகள் வரை இணைய வசதியை பெற முடியும்.
இக் கண்டு பிடிப்பின் மூலமாக வானொலி அலை வரிசைகள் மட்டுமன்றி ஒளியும் வை-பை கடத்தியாக செயற்படுவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இது சீனாவில் பொதுவாக பாவனையில் உள்ள அகண்ட அலை வரிசை (Broad Band) இணைய இணைப்பை விட வேகம் கூடியதென சுட்டிக் காட்டப் படுகின்றது.