முத்த காட்சியும் முடியாது.. சாரியோட நனையவும் முடியாது..

தமிழில் ‘ஆடுகளம்’, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ படங்களில் நடித்து பிரபலமான டாப்சி தற்போது லாரன்சுடன் ‘காஞ்சனா 2’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா இயக்கும் வைராஜா வை படத்திலும் நடிக்கிறார்.
இந்தியிலும் ஒரு படம் கைவசம் உள்ளது. கவர்ச்சியாக நடிக்க டாப்சி மறுத்து வருகிறார். நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து உள்ளார்.

முத்த காட்சிகளில் நடிக்கவும் உடன்பாடு இல்லை என்று கூறி உள்ளார். அது மாதிரி நடிக்க வற்புறுத்தும் படங்களையும் தவிர்க்கிறார்.

சமீபத்தில் இந்தி படமொன்றில் அவர் நடித்துக் கொண்டு இருந்தபோது வெள்ளை சேலை உடுத்தி மழையில் நனைவது போன்ற காட்சியை எடுக்க இயக்குனர் விரும்பினார்.

இதற்காக அவரிடம் வெள்ளை சேலை கொடுக்கப்பட்டது. அந்த சேலையை உடுத்திக் கொண்டு நனைந்தால் உடம்பு முழுவதும் தெரிந்து, ஆபாசமாக இருக்கும் என்று கூறி அப்படி நடிக்க மறுத்து விட்டார். 

பிறகு சிவப்பு நிற சேலையை கொடுத்தனர். அதை உடுத்திக் கொண்டு மழையில் நனைந்து நடித்தார்.

கவர்ச்சிக்கு மாறிய டாங்கே 

தமிழில் ‘மேகா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தில் தாவணி அணிந்து குடும்ப பெண்ணாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

இப்படத்தையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்களிலும் ஹோம்லி பெண்ணாக நடித்திருந்தார்.

இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படம் ‘ஒரு நொடியில்’. 

 இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கவர்ச்சியாக நடித்திருக்கிறார். எம்.ஏ.சௌத்ரி இயக்கும் இப்படத்தை சார்பர்வேஷ் இசையமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் ஆவி, இன்னமும் இந்த ஊரில் பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் பயந்து கொண்டிரு க்கையில், அது உண்மையா இல்லையா? என்பதை கதை கருவாக வைத்து உருவாகி வருகிறது.

திகில் மற்றும் ஹாரர் படமான இப்படத்தை நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரித்து வருகின்றார்.

ஸ்ருதியுடன் லிப் டு லிப்பா! தெரித்து ஓடிய நடிகர்

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம். ‘ஜிஸ்ம்’ , ‘ஷூட் அவுட் அட் வடலா’  படங்களில் நடித்தபோது ஹீரோயி னுடன் நெருக்கமான காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்தார்.

பிரியா ரன்சல் என்பவரை ஜான் மணந்தார். இதை யடுத்து படங்களில் இனி ஹீரோயி னுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்ப தில்லை, முத்தக் காட்சியிலும் நடிப்ப தில்லை என்று தீர்மானம் எடுத்திருக் கிறாராம்.
தற்போது ‘வெல்கம் பேக்’  படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நடித்து வருகிறார். ஸ்ருதியுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்தது. இதுபற்றி ஆப்ரகாமிடம் இயக்குனர் அனீஸ் பாஸ்மி கூறினார்.

அவரோ, திருமணத்துக்கு பிறகு நெருக்கமான காட்சி, முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என தீர்மானித் துள்ளேன். இருந்தாலும் உங்களுக்காக நடிக்கிறேன் என சொல்லி யிருந்தார்.

இந்நிலையில், இந்தி நடிகை சோனம் கபூர் சமீபத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவருடன் நடித்த சல்மான் கானுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறி தெரிந்தது.

அவருக்கும் பரிசோத னைகள் நடந்தது. நெரு க்கமான காட்சிகளில் நடித்தால் பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறுவதால் இப்போது ஸ்ருதியுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஜான் தயங்கு கிறாராம்.

இந்த கிஸ் சீன் வேண்டாம் என கூறிவிட்டாராம் ஜான். ஸ்ருதிக்கு காய்ச்சல் ஏதும் இல்லை. இருந்தாலும் இப்போது நெருக்கமான காட்சிகளில் நடிக்கவே சிலர் பயப்படு கின்றனர்’  என பட யூனிட்டார் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings