அப்பிளின் உற்பத்திகளை பிரதி பண்ணியது செம்சுங் !

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் ஆகிய வற்றின் வசதிகளை பிரதி பண்ணிய குற்றச் சாட்டுக்காக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு செம்சுங் நிறுவன த்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அப்பிளின் உற்பத்திகளை பிரதி பண்ணியது செம்சுங் !
செம்சுங் நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்ட 26 உற்பத்திகளில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதிகள் உள்ளடக்கப் பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப் பட்டிருந்தது.

இதனை யடுத்து அப்பிள் நிறுவனம் செம்சுங் நிறுவ னத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்தது.

வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி லுசி கோஹ் தலைமை யிலான குழுவினர் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளனர்.

எனினும் தமது உற்பத்திகள் தனித் தன்மை வாய்ந்தவை என்று உறுதிபடத் தெரிவிக்கும் செம்சுங், இது தொடர்பில் மேன் முறையீடு செய்யவு ள்ளதாக அறிவித்துள்ளது.
அப்பிள், செம்சுங் நிறுவனங் களுக்கிடை யிலான முறுகல் சமீப காலமாக அதிகரித்து வருகின்ற மையால் 

போட்டித் தன்மை மிக்க மொபைல் சந்தையில் பாரிய தொரு மாற்றம் ஏற்படும் என ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings