ருவிட்டரில் அனில் கும்ளே.

அனில் கும்ளே மீது கிரிக்கெட் ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவருடைய ருவிட்டர் பக்கம் நுழைந்து பார்க்க வேண்டும்.

 

இந்திய முன்னாள் அணித்தலைவர் கும்ளே ருவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதிலும் தனது 44 வது பிறந்த நாளாக பார்த்து ருவிட்டரில் கணக்கு துவங்கியிருக்கிறார். இறுதியில் நானும் ருவிட்டரில் இருக்கிறேன்.

மேலும் ஓராண்டு வயதான, கொஞ்சம் பக்குவமாகி இருப்பதாகவும் நினைக்கும் நாளில் ! எதிர்பார்ப்புடன்...”

இது தான் கும்ளேவின் முதல் குறும்பதிவு. முதல் சில மணி நேரத்திலேயே இந்த குறும்பதிவு 300 முறைக்கு மேல் ரீ ருவிட் செயப்பட்டது.

ரசிகர்கள் பலரும் கும்ளேவுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

ரசிர்களின் வாழ்த்துக்கள் சம்பிரதாயமான வாழ்த்தாக இல்லாமல் அவர் மீதான அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
Tags:
Privacy and cookie settings