மூளையின் கட்டமைப்பை போன்று செயற்படும் 'நரம்புக்கலங்கள்' என அழைக்கப்படும் ஒரு மில்லியன் கணிப்பிடும் அலகுகளை உள்ளடக்கிய தபால் முத்திரை அளவான புதிய சூப்பர் கணினி சிப் உபகரணத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த சிப்பிலுள்ள ஒவ்வொரு நரம்புக்கல அலகும் 256 ஏனைய அலகுகளுடன் இணைப்பை கொண்டுள்ளன. இந்த புதிய சிப்பானது அதிகளவான தரவுகளை ஒரே சமயத்தில் பயனுறுதிப்பாட் டுடன் கையாள்வதற்கு உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிப் உபகரணம் கணக்கீடு, தொடர்பாடல், நினைவகம் என்பவற்றை மிகவும் நெருக்கமாக இணைப்பதாக உள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்ற கலாநிதி தர்மேந்திரா மோதா தெரிவித்தார்.
இதற்காக முழுமையாக வேறுபட்ட புதிய மென்பொருள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சிப்பால் ஆற்றப்படும் மொத்த பணியாற்றலானது 200 மனித வருட வேலைக்குச் சமனானது ஆகும்.