இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வு கூறிய பெண் !

தான் உயிரிழக்கக் கூடும் என அச்சம் கொண்ட பெண் ணொருவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்த பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் இலி னொய்ஸ் மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வு கூறிய பெண் !
இலினொய் ஸின் கிழக்கில் உள்ள லொய்ஸ் என்ற இடத்தில் வசித்த மிச்செல் ரோவ்லிங் என்ற 25 வயது டைய பெண்ணே சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

பொலிஸா ருக்குக் கிடைத்த இரகசிய தகவலை யடுத்து பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது அவர் சடலமாகக் காணப்பட் டதாக தெரிவிக்க ப்படுகிறது.

அந்தப் பெண்ணின் உடலில் காணப்பட்ட வெட்டுக் காயங்களின் அடிப்படை யில் அவர் கூரிய ஆயுத ங்களால் குத்திக் கொலை செய்யப் பட்டிருக்க லாம் என பொலிஸார் சந்தேகிக் கின்றனர்
மிச்செல், உயிரிழப் பதற்கு முன் அவர் பேஸ்புக் கில் வெளியிட்ட தகவல் பொலிஸா ருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியு ள்ளதுடன் தீவிர விசார ணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

எனக்கு இன்றிரவு ஏதாவது நடந்தால்... நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்பதை என் குழந்தை களுக்கு தெரியபடுத்துங்கள்.. 

அம்மாவுக்குச் சொல்லுங்கள் நான் அவளை நேசிக்கிறேன் என்று... என அவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்திருந்தார்.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே மிச்செல் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என பிரதேசத்துக்குப் பொறுப்பான புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings