பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சன்னி லியோன் .அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்தவர் என்பதற்காக அவரை ஒதுக்கி வைக்க கூடாது என்று பத்திரிகை கவுன்சில் தலைவரான நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகையான சன் னி லியோன் கலந்து கொண்டார்.
இவர் 30க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்தவர். மேலும் 25 ஆபாச படங்களையும் இயக்கி உள்ளார்.
தன்னுடைய ஆபாச போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளுக்காக தனியாக ஒரு இணைய தளமும் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொ டர்பாக மத்திய அரசுக்கு பல புகார்கள் குவிந்தது. இந்த புகார்களின் நகல்களை பத்திரிகை கவுன்சிலுக்கு மத்திய அரசு அனுப்பியது.
இது தொடர்பாக நீதிபதி கட்ஜு வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகை சன்னி லியோன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் ஆபாச படங்களில் நடிப்பதன் மூலம் சம்பாதிக்கிறார்.
இது இந்தியாவில் குற்றமாக இருந்தாலும், அமெரிக்க சட்டப்படி குற்றமல்ல. இந்தியாவில் ஆபாச படங்களில் நடிக்கிறார், அல்லது அந்த படங்களை விற்பதன் மூலம் சம்பாதிக்கிறார் என்று எந்த புகாரும் வரவில்லை.
இந்தியாவின் சமூக ஒழுக்க நெறிமுறைகளை சன்னி லியோன் மீறாமல் இருக்கும்வரை அவரை ஒதுக்கிவைக்க தேவையில்லை. இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.
யார் இந்த சன்னி லியோன்:-
சன்னி லியோன் அமெரிகாவின் இளைஞயர்களை தன் உடல் அழகால் கட்டி போட்டு வைத்திருக்கும் நீல பட நடிகை .சன்னி லியோனின் இயற்பெயர் கெரன் மல்ஹோத்ரா. இவர் ஒரு இந்திய பஞ்சாபி பெண். பதிமூன்று வயதில் அமெரிக்கா போன அவர் அங்கே மாடலானார்.
2003ல் பென்ட் ஹௌஸ் என்ற பலான பத்திரிகையால் அந்த வருடத்தின் சிறந்த நடிகையாக தேர்தேடுக்கபட்டு பின் ஒரே வருடத்தில் மாக்சிம் பத்திரிகையால் அமெரிக்காவின் மிக சிறந்த நீல நடிகையாக தேர்தேடுக்கபட்டார்.
ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்குள் ஆரம்பத்திலிருந்தே பாலிவுட்டில் ஹீரோயினாக புகழ் பெற வேண்டும் என்ற ஆசைதான் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாம்.
நடிகை என்று சொன்னால் போதாதா, அது என்ன ஆபாசப் பட நடிகை என்றும் விசனப்படுகிறார் இந்த கவர்ச்சி களேபரம். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் புதிதாக சேர்ந்துள்ளார் சன்னி.
கவர்ச்சியிலும், ஆபாச நடிப்பிலும் இவருக்கு நிகர் இவர்தான் என்பது கனடா நாட்டில் அனைவருக்கும் தெரியும்.
கரேன் மல்ஹோத்ரா என்ற இயற்பெயருடைய இவரை சன்னி லியோன் என்றால்தான் யாருக்குமே அடையாளம் தெரியும். தன்னைப் பற்றியும், தனது இந்தியத் தொடர்புகள் குறித்தும் சன்னி லியோன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்,
என்னை யாரும் ஆபாசப் பட நடிகை என்று கூறாதீர்கள்.
அது எனக்குப் பிடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இடம் பெற்றுள்ளதன் மூலம் பாலியல் தொடர்பான திரைப்படங்களுக்கும், விபச்சாரத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை இந்திய மக்கள் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
எனக்கு ஆரம்பத்தில் பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. இங்கு வந்து நிறையப் படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.
நான் நர்ஸ் படிப்பில் இருந்தபோதே போர்ன் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனக்குள் ஹீரோயினாக ஆக வேண்டும் என்பதே வெறியாக இருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை. எனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று இதை ஏற்றுக் கொண்டேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை.
அப்படி நடிக்கப் போய்த்தானே இன்று அடையாளம் கிடைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.
எனவே சன்னி லியோன் என்பதற்கான அடையாளம் குறித்து எனக்கு பெருமைதான். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும். எனக்கும் கல்யாணம் நடக்கும், நானும் குழந்தைகளைப் பெற்று அவர்களை கொஞ்சி மகிழ்வேன்.
மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு கூறி வளர்த்துள்ளனர். எனவே என்னால் யாரிடமும் கோப்படத் தெரியாது.
எனக்குக் கொடுக்கப்படும் வேலையை 100 சதவீத திருப்தியுடன் முடித்துக் கொடுப்பேன். இது எனக்குள் ஒழுக்கத்தையும் ஏற்படுத்த உதவுகிறது என்றார் சன்னி.
சரி பாலிவுட்டில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இந்த ஷோவுக்கு வரும் வரை அப்படி யாரும் எனக்குப் பிடித்தவராக இல்லை. ஆனால் ஷோவுக்கு வரும் முன்பு பாடிகார்ட் படத்தைப் பார்த்தேன்.
உடனே சல்மான் கானைப் பிடித்து விட்டது. மிக அழகாக, கம்பீரமாக இருக்கிறார். அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன். அவருடன் பணியாற்றவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார் சன்னி.