இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்று தானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும்.
மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23 முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப் தான் வேறு எந்த மரமும் கிடையாது.
அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும் போது பாவோபாப் மரங்கள் தான் உலகின் மிகப் பெரிய மரங்கள்.
வால் எலும்பில் திடீரென வலி ஏற்படுவது ஏன்? தெரியுமா?
பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும்.
எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்!
மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும்.
கணவருக்கு முடிவெட்டிய விட்ட பாலிவுட் நடிகை.. வைரலாகும் வீடியோ !
மேல்மரம் காய்ந்து விட்ட நிலையில் பல கிராமங் களில் அடி மரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.
லத்தீன் மொழியில் இதை ஆடன்சோனியா என்று அழைக்கிறார்கள்.
இந்த மரத்தை மடகாஸ் கர் நாட்டில் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஆடன்சன் என்ற பெயர் கொண்ட விஞ்ஞானி கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
அவரை கௌரவிக்கும் விதத்தில் இம் மரத்திற்கு லத்தீன் மொழியில் ஆடன்சோனியா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆடன்சோனியா அதாவது பாவோபாப்பில் ஏழுவகை (ஸ்பீஷிஸ்) மரங்கள் உண்டு.
பாட்டியை கடித்து கொன்று விட்டு நிர்வாணமாக ஓடிய இளைஞர்.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம் !
இவற்றில் ஆறுவகை மரங்கள் மடகாஸ்கர் நாட்டிற்குரியவை. இந்த ஆறில் ஒரு வகை மட்டும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது.
ஏழாவது வகை ஆஸ்திரேலியா நாட்டிற்குரியது. பாவோபாப் என்பது இந்த வகை மரங்களின் பொதுவான பெயர்.
A இரத்தப்பிரிவினரை குறி வைக்கும் கொரோனா... O பிரிவுக்கு விலக்கு உண்மை என்ன?
தென் ஆப்பிரிக்காவின் லிம்போமா மாகாணத்தில் உள்ள க்ளென் கோபர்வோபாப் உலகின் மிகப் பெரிய மரமாகக் கருதப்படுகிறது.
இதன் சுற்றளவு 47 மீட்டர் (154 அடி). சமீப காலத்தில் இம்மரம் இரண்டாகப் பிளந்து விட்டது.
தென் ஆப்பிரிக்காவின் சன்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள பாவோபாப் மரம் இப்போது உலகின் மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது.
இதன் குறுக்களவு 10.64 மீட்டர், சுற்றளவு 33.4 மீட்டர் (130 அடி).
பல்வேறு பாவோபாப் மரங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவையாகக் கருதப்படுகின்றன.
இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட முதல் கொரோனா வைரஸ் படம் !
ஏனைய மரங்களில் அவற்றின் வயதைக் குறிக்கும் வளர்ச்சி வட்டங்கள் (க்ரோத் ரிங்ஸ்) போல பாவோபாபில் கிடையாது.
ஆனால் கார்பன் டேட்டிங் முறையில் இவற்றின் வயதைக் கணிக்க இயலும்.
தஞ்சாவூருக்கு காந்திஜி ரோடு வந்த கதை !
கடற்கரையை ஒட்டிய பகுதி களில் ஆடன்சோனியா டிஜிட்டாட்டா வகை மரங்கள் வளர்கின்றன. இம்மரத்தின் பல்வேறு பாகங்கள் பயன்களைத் தரவல்லன.
இலைகள்: இவற்றைச் சமைத்துக் கீரை வகை யைப் போல் சாப்பிடலாம்.
ஆப்பிரிக்க நாடுகளாகிய மலாவி, ஜிம்பாப்வே, சஹேல் நாடுகளில் இலை பச்சையாகவும், உலர வைக்கப்பட்ட இலைகளைப் பொடி செய்தும் உணவாக உண்கின்றனர்.
நைஜீரியா நாட்டில் பாவோபாப் இலைகளை கூக்கா என்று குறிப்பிடுகிறார்கள். இலைகளிலிருந்து கூக்கா சூப் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
வயிறு செய்யும் வேலைகள் என்ன?
பழம்: ஆரஞ்சுப் பழத்தைக் காட்டிலும் கூடு தலான அளவில் சி வைட்டமின் நிறைந்தது பாவோபாப் பழம். கால்ஷியம் சத்து பசும்பாலைக் காட்டிலும் கூடுதல்.
சிலர் பழத்தின் சதைப் பகுதியைப் பாலிலோ கஞ்சியிலோ கலந்தும் சாப்பிடு கின்றனர். மலாவி நாட்டில் இப்பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்கப்படுகிறது.
உடலில் தேவையற்ற உடல் பாகங்கள் !
இப்பழத்தை ஜிம் பாப்வே நாட்டின் மாவுயு என்று அழைக்கின்றனர். பழம் அப்படியே சாப்பிடப்படுகிறது.
இப்பழத்தி லிருந்து மருந்தாகப் பயன்படும் களிம்பும் தயாரிக் கப்படுகிறது.
பழத்தில் சர்க்கரை தூவி வண்ணம் (பெரும்பாலும் சிவப்பு) கொடுத்து இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாகவும் விற்கப்படுகிறது.
இந்த மிட்டாய்க்கு உபுயு என்று பெயர். விதைகள்: சூப்பை கெட்டியாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மரத்திலிருந்து நார், வண்ணம் மற்றும் எரிபொருள் கிடைக் கின்றன. இதன் நார் மிகவும் கெட்டியானது.
காய வைக்கப்பட்ட பழத்தின் கூழ் அப்படியே உணவாக உண்ணப்படுகிறது அல்லது கஞ்சி சற்று ஆறி வரும் போது அத்துடன் கலந்து சாப்பிடப்படுகிறது.
இப்படிச் செய்வதால் அதிலுள்ள வைட்டமின்கள் அழிவதில்லை. இதைப் பொடி செய்தும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடலாம்.
டான்சானியா நாட்டில் கரும்புச் சாறுடன் பாவோபாப் பழச்சாறைக் கலந்து பீர் தயாரிக்கிறார்கள்.
ஆணின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?
காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்தால் பழத்தின் கூழ் வெகு காலம் கெடாமல் இருக்கும்.
இதிலிருந்து குளிர் பானங்கள் தயாரிக் கலாம். சோடியம் மெட்டா சல்பைட் தூளைப் பயன்படுத்தி கூழைக் கெடாமல் பாதுகாக்க இயலும்.
சமீப காலம் வரை ஐரோப்பிய யூனியனில் பாவோபாப் பழ விற்பனை தடை செய்யப் பட்டிருந்தது.
பச்சை மிளகாய்.. சிவப்பு மிளகாய் - இவற்றில் சிறந்தது எது?
2008-ஆம் ஆண்டு ஜூலை முதல் பாவோபாப்பின் உலர்த்தப்பட்ட பழக்கூழ் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
லாப நோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் 25 லட்சம் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் பாவோபாப் பழம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது.