திருமணம் என்பதே சிக்கலானது.. ஸ்ருதிஹாஸன் !

திருமணம் என்பதே ஒரு சிக்கலான முறை தான்.. அதற்காக அதை நான் எதிர்ப்பதாக நினைக்க வேண்டாம், என்று கூறி யுள்ளார் ஸ்ருதி ஹாஸன். சமீபத்தில் ஸ்ருதி ஹாஸன் அளித்த பேட்டியில் ‘எப்படிப் பட்டவரை திருமணம் செய்து கொள்வீர்கள்?’ என்று கேட்டி ருந்தனர்.
அதற்கு பதிலளித்த ஸ்ருதி, “திருமணம் பற்றி சில நம்பிக்கையும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.

ஆனாலும் திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு எடுத்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்தால் திருமணமே செய்து கொள்வது இல்லை என்ற முடிவை எடுப்பேன்.

திருமண முறையே சிக்கலானது 

காரணம் திருமண முறையே சிக்கலானது. இதற்காக திருமண முறைக்கு நான் எதிர்ப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. என் நண்பர்கள் சிலர் அழகான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை திருமணம் என்பது கூடையில் இருக்கும் பூக்கள் போன்றது என் மனதை கேட்டால் அந்த பூக்கள் வேண்டாம். கூடையில் இருக்கும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக்கொள் என்றுதான் சொல்லும்.

சாம்பார் சாதம் மாதிரி வேணும்… 

திருமணத்தை ஏன் சிக்கலானதாக பார்க்கிறீர்கள்? என் கவனம் எல்லாம் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. என் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சில நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.

இருபது வயதைத் தாண்டிவிட்ட என் வாழ்க்கையில் சாம்பார் சாதம் இதுவரை பிடித்த உணவாக இருந்திருக்கிறது. எனக்கு கணவராக வருகிறவர் நான் விரும்பிச் சாப்பிடும் சாம்பார் சாதம் போல் இருக்க வேண்டும்.

 இல்லாவிட்டால் பிரச்சனைகள்தான் ஏற்படும். எனவே அப்படி பிடித்தமானவர் கணவராக அமையாவிட்டால் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன்.

சினிமாக்காரரா? 

சினிமாவில் இருப்பவரை மணப்பீர்களா? ஆமாம், திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன். அதில் சில பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய நன்மைகள் இருக்கிறது.

என் தாய், தந்தை சினிமாவில் இருந்து வந்தவர்கள். எனவே திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

இன்னும் சந்திக்க வில்லை 

அப்படிப் பட்டவரை திரையுலகில் சந்தித்து விட் டீர்களா? ‘இதுவரை சந்திக்க வில்லை.’
Tags:
Privacy and cookie settings