விரைவாக மின்னேற்றமடையும் புதிய மின்கலம் !

அறி­வியல் ஆய்­வுகள் கார­ண­மாக எமது கரங்­களில் தவழும் பல இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் பல உத­ய­மா­கி­யுள்­ளன. அண்­மைய வர­வு­க­ளான இயங்­கு­தளம் கொண்ட கைத்­தொ­லை­பே­சிகள், கைய­டக்கக் கணி­னிகள், கடி­கா­ரங்கள் போன்­றவை 


பல சிறப்­பி­யல்­பு­களை தம்­முள்ளே கொண்­ட­வை­யா­கவும் மின்­க­லத்தில் இருந்து பெறப்­படும் மின்­சக்­தியில் செயற்­ப­டு­ப­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

இச்­சா­த­னங்­களின் சிறப்­பி­யல்­பு­களைப் பயன்­ப­டுத்­து­கையில் அவை அதிகம் மின்­சக்­தியை நுகர்­கின்­றன. இந்­நு­கர்­விற்கு ஈடு­கட்­டும் ­வ­கையில் மின்­க­லங்கள் வடி­வ­மைக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் அளவில் சிறி­தாக அமை­கை­யி­லேயே அது பய­னா­ளர்­களால் பெரிதும் விரும்­பப்­ப­டு­வ­தாக அமை­கின்­றது.

எனவே, சாத­னங்­களின் செயற்­பாட்­டிற்­கான மின்னை வழங்கும் வகை­யிலும், அதே­வேளை அளவில் சிறி­தாக அமை­கின்ற மின்­க­லங்­களை அமைப்­ப­தென்­பது சவால் மிக்க விட­ய­மாக அமை­கின்­றது.

மேலும், அபா­ய­மற்ற தன்மை, உற்­பத்திச் செலவு மற்றும் நீடித்த பாவனை என்­ப­வையும் மின்­க­லங்­களைக் கட்­ட­மைப்­பதில் எதிர்­பார்க்­கப்­படும் இயல்­பு­க­ளாகும்.

மின்­க­லங்­களால் அதிக நேரம் மின்­சக்­தியை வழங்­க­மு­டி­யா­விட்டால், மீண்டும் மீண்டும் மின்­க­லங்­களை மீள மின்­னேற்றி பாவிக்க பய­னா­ளர்கள் முயன்­றாலும், முழு­மை­யான மின்­னேற்றம் அடை­வ­தற்கு மின்­க­லங்கள் கணி­ச­மான நேரத்­தினை எடுக்­கின்­றன.

இது பய­னா­ளர்­களின் பொறு­மை­யினைச் சோதிப்­ப­தாக அமை­கின்­றது. எனவே, குறை­வான நேரத்தில் மின்­னேற்­றத்­தக்க மின்­க­லங்­களைக் கட்­ட­மைப்­பது குறித்து ஆய்­வா­ளர்கள் கவனம் செலுத்தி வரு­கின்­றனர்.

தற்­போ­தைய இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் அநே­க­மா­ன­வற்றில் லிதியம் அயன் மின்­கலம் (Lithium-ion battery) பாவ­னையில் இருந்து வரு­கின்­றது. இதில் பயன்­ப­டுத்­தப்­படும் லிதியம் (Lithium - Li) மூலகம், ஆவர்த்­தன அட்­ட­வ­ணையில் 3 ஆம் கூட்ட மூல­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது.

இதே கூட்­டத்தில் காணப்­படும் அலு­மி­னியம் (Aluminum - Al) மூல­கத்­தினைப் பயன்­ப­டுத்தி மின்­க­லத்­தினைக் கட்­ட­மைக்கும் சாத்­தி­யங்கள் குறித்து அறி­வி­ய­லா­ளர்கள் நெடுங்­கா­ல­மாக முயற்­சித்து வந்­துள்­ளனர்.

இந்த முயற்­சியில் அமெ­ரிக்­காவின் ஸ்ரான்போட் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்கள் வெற்றி பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இவர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள அலு­மி­னியம் அயன் மின்­கலம் (Aluminum-ion battery) ஆனது ஒரு நிமி­டத்தில் முழு­மை­யாக மின்­னேற்­றப்­ப­டக்­கூ­டி­யது என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன், நீண்­ட­காலம் நிலைத்துச் செயற்­படும் தன்மை கொண்­டது எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


இந்த ஆய்வு தொடர்­பான விப­ரங்கள் ஏப்ரல் 6 ஆந் திகதி வெளி­யான Nature அறி­வியல் சஞ்­சி­கையில் பிர­சு­ர­மா­கி­யுள்­ளன.

ஆய்­வா­ளர்­களால் கட்­ட­மைக்­கப்­பட்ட புதிய மின்­க­லத்தில் அனோட்­டாக அலு­மி­னிய உலோ­கமும் கதோட்­டாக காபனின் பிற­தி­ருப்­பங்­களில் ஒன்­றான கிர­பைற்று உம் உப­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது.

இவற்­றுடன் மின்­ப­கு­பொ­ரு­ளாக ஏற்றக் கரை­ச­லான உப்புக் கரைசல் உப­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த உள்­ள­டக்­கங்கள் அனைத்தும் பல்­ப­கு­தி­யத்தால் ஆக்­கப்­பட்ட உறை­யினுள் உரிய வகையில் உள்­ள­டக்­கப்­பட்டு புதிய மின்­கலம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மின்­கலக் கட்­ட­மைப்­பா­னது சுமார் ஒரு நிமி­டத்தில் முழு­மை­யான மின்­னேற்றம் அடைந்து ­விடும் திறன் கொண்­ட­தாகத் திகழ்­கின்­றது.

இதற்கு முன்னர் அலு­மி­னிய உலோ­கத்­தினை கொண்ட மின்­க­லங்கள் 100 தட­வை­க­ளான மின்­னேற்ற - மின்­னி­றக்க சுற்­றுக்கள் வரை மாத்­தி­ரமே செயற்­ப­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

ஆனால், புதிய மின்­க­ல­மா­னது அண்­ண­ள­வாக 7,500 எண்­ணிக்கை மின்­னேற்ற - மின்­னி­றக்க சுற்­றுக்கள் வரை தனது கொள்­தி­றனை இழக்­காது செயற்­படும் செயற்­ப­டு­வதும் ஆய்­வா­ளர்­களின் பரீட்­சிப்பில் இருந்து அறி­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மின்­கல அமைப்பு வளைக்­கக்­கூ­டி­ய­தாக அமை­வதால் அணியும் இலத்­தி­ர­னியல் சாத­னங்­களில் உள்­ள­டக்­கப்­ப­டு­வது இல­கு­வாக அமையும்.

மின்­க­லங்­களில் எதிர்­கொள்­ளப்­படும் அபாய விளை­வாக அதன் தீப்­பற்றும் தன்மை காணப்­ப­டு­கின்­றது.

மின்­கலம் ஏதா­வது உராய்­விற்கு உட்­பட்டு வெப்பம் பிறப்­பிக்­கப்­ப­டு­கையில் மின்­கலம் தீப்­பற்றி விடும் தன்மை கொண்­ட­தாக அமை­வது சாத­னங்­களைப் பாதிப்­ப­தாக அமை­கின்­றது.


 கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள புதிய மின்­கலம் அவ்­வா­றான தன்மை அற்­ற­தாகக் காணப்­ப­டு­கின்­றது. இதில் திரவ மின்­ப­கு­பொருள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­பதால் கசிவு ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் மறுப்­ப­தற்­கில்லை.

புதிய அலு­மி­னியம் அயன் மின்­க­லத்தின் நேர் மற்றும் மறை மின்­வாய்­க­ளுக்­கி­டையே பெறக்­கூ­டிய அழுத்த வேறு­பாடு, லிதியம் அயன் மின்­க­லத்­தி­னதை விட தி­ய­ளவே தற்­போது அடை­யப்­ பட்­டுள்­ளது.

இந்த அழுத்த வேறு­பாட்­டினை அதி­க­ரிக்கும் முயற்­சியில் ஆய்­வா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். புதிய மின்­கலக் கட்­ட­மைப்பில் காணப்­படும் பிர­தி­கூ­லங்கள் நீக்­கப்­படும் பட்­சத்தில், இம்­மின்­கலம் இலத்­தி­ர­னியல் சாத­னங்­களில் இடம்­பி­டிக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது.

கைத்­தொ­லை­பேசி மின்­க­லங்கள் மின்­னேற்றம் இழந்து செய­லி­ழந்து நிற்­கையில், அதில் சேமித்த அழைப்பு இலக்­கங்­களைக் கூடப் பெற­மு­டி­யாத கையறு நிலையே தற்­போது காணப்­ப­டு­கின்­றது.

எனவே, புதிய மின்கலத்தின் விரைவான மின்னேற்றம் இவ்வாறான தவிக்கும் நிலைகளை நீக்கும் என நம்பலாம்.
Tags:
Privacy and cookie settings